News April 7, 2025
வரி அதிகரிப்பு எதிரொலி: பெட்ராேல் விலை உயருமா?

பெட்ரோல் மீதான கலால் வரியை ₹11இல் இருந்து ₹13-ஆகவும், டீசல் மீதான கலால் வரியை ₹8இல் இருந்து ₹10-ஆகவும் மத்திய அரசு அதிகரித்துள்ளது. இதனால், சில்லரை விலையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இருக்காது, முன்பு கச்சா எண்ணெய் விலை அதிகமாக இருந்தபோது குறைந்த விலையில் பெட்ரோல், டீசல் அளிக்கப்பட்டதால் ஏற்பட்ட இழப்பை இதன்மூலம் ஈடுகட்ட இருப்பதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Similar News
News September 15, 2025
வாக்கு திருட்டு பற்றி விசாரிங்க: முன்னாள் தேர்தல் ஆணையர்

வாக்கு திருட்டு குறித்து விசாரணை நடத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை என முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி தெரிவித்துள்ளார். ராகுல் காந்தியை குறை கூறுவதை நிறுத்த வேண்டும் எனவும், இந்த விவகாரத்தில் விசாரணை மேற்கொண்டு உண்மையை வெளிப்படுத்தவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பது மக்களின் நம்பிக்கையை சேதப்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.
News September 15, 2025
‘இளைய சூப்பர் ஸ்டார்’ ஆன தனுஷ்

தனுஷ் இயக்கி நடிக்கும் ‘இட்லி கடை’ படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் படத்தில் நடித்த நடிகர்கள், சினிமா துறையினர் என பலரும் பங்கேற்றனர். இந்த படவிழாவின் போது, தனுஷை வரவேற்று வைக்கப்பட்ட பேனர் ஒன்று தான் தற்போதைய பேசுபொருளாக மாறியுள்ளது. ‘இளைய சூப்பர் ஸ்டாரே’ என தனுஷை வர்ணித்து அந்த பேனர் வைக்கப்பட்டிருந்தது. இருப்பினும் சிறிது நேரத்தில் அந்த வாசகம் மை பூசி அழிக்கப்பட்டது.
News September 15, 2025
இந்தியாவிற்கு அழுத்தம்: USA-ன் மக்காச்சோள அரசியல்

தங்களிடம் இருந்து மக்காச்சோளத்தை இந்தியா வாங்கவில்லை என்றால் தங்களது சந்தையை சந்திக்க நேரிடும் அமெரிக்கா மீண்டும் எச்சரித்துள்ளது. தங்களது வேளாண் பொருட்களை இந்தியாவில் விற்பதே அமெரிக்காவின் முக்கிய நோக்கமாக உள்ளது. மக்காச்சோளம் உற்பத்தில் ஏற்கனவே தன்னிறைவை அடைந்துள்ள இந்தியா, ஏன் அமெரிக்காவின் மரபணு மாற்றப்பட்ட சோளத்தை வாங்க வேண்டும் என்ற கேள்வியையும் நிபுணர்கள் எழுப்புகின்றனர்.