News February 25, 2026
வரியை 126% ஆக உயர்த்திய டிரம்ப்

இந்தியாவின் சோலார் பேனல்களுக்கு 126% வரி விதித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, இதன் விலை USA-ல் இருமடங்காக உயரும். சோலார் உற்பத்திக்கு இந்திய அரசு நியாயமற்ற மானியங்கள் வழங்குவதால் US உற்பத்தியாளர்களை விட இந்திய ஏற்றுமதியாளர்கள் அதிக லாபம் பார்ப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்திய பொருள்களுக்கு USA-ல் வரிகள் குறையும் என கூறப்பட்ட நிலையில், இந்த அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News February 25, 2026
நல்லகண்ணுவின் ஆசை நிறைவேறியது

மறைந்த தலைவர் நல்லகண்ணுவின் உடல் மருத்துவ மாணவர்களின் கல்விக்காக தானமாக வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரின் விருப்பப்படியே இது நடப்பதாகவும், சென்னை மருத்துவக் கல்லூரிக்கு உடல் தானம் அளிக்கப்படுவதாகவும் குடும்பத்தினர் கூறியுள்ளனர். வாழ்நாள் முழுவதும் தனக்கு கிடைத்த பணம், பரிசுத் தொகையை கட்சிக்கும், TN மக்களின் நலனுக்கும் வழங்கிய நல்லகண்ணு, தற்போது தன் உடலையே விட்டுச் சென்றுள்ளார்.
News February 25, 2026
பாமகவுக்கு 18+1…தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டதா?

அன்புமணி தரப்பு பாமகவுடனான தொகுதி பங்கீட்டை அதிமுக இறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2021 தேர்தலில் அதிமுக கூட்டணியில் 23 தொகுதிகளில் போட்டியிட்ட பாமகவுக்கு இம்முறை 18 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாமக இரண்டு பிரிவுகளாக உள்ளதால் கடந்த முறையைவிட 5 தொகுதிகளை அதிமுக குறைத்துள்ளதாக தெரிகிறது.
News February 25, 2026
சிறையில் 7 ஆண்டுகளை கழித்த நல்லகண்ணு

எளிமையின் சிகரமான அய்யா நல்லகண்ணுவின் சிறை வாழ்க்கை தியாகங்களால் நிறைந்தது. கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டபோது அவர் சிறையில் பெரும் சித்ரவதைகளை அனுபவித்தார். பின்னர் நெல்லைச் சதி வழக்கில் 1949-1956 வரை மதுரை, நாங்குனேரி போன்ற இடங்களின் சிறை தண்டனை அனுபவித்தார். இதை தவிர விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்களின் நலனுக்காகப் போராடியபோது பலமுறை சிறை சென்றுள்ளார்.


