News April 13, 2025
வரலாற்று சிறப்பு மிக்க சங்கரபதி முனீஸ்வரர்

காரைக்குடி – தேவகோட்டை நெடுஞ்சாலையில் அமராவதி புதூர் அருகே அமைந்துள்ள சங்கரபதி முனீஸ்வரர் வரலாற்று சிறப்பு மிக்க தெய்வம். மருது பாண்டியர்கள் ஆங்கிலேயர்களால் பிடிக்கும் முன் அவர்கள் தங்கி இருந்த சங்கரபதி கோட்டைக்கு அருகில் இருப்பதால் சங்கரபதி முனீஸ்வரர் என்ற பெயர் வந்தது. இந்த கோயில் இருக்கும் நெடுஞ்சாலை வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் நிறுத்தி தேங்காய் உடைத்து செல்வது வழக்கம்.
Similar News
News April 15, 2025
கோடை காலத்தில் குடிக்க வேண்டிய பானங்கள்

சிவகங்கை மக்களே கோடையில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க இந்த பானங்களை மட்டும் அருந்துங்கள். இளநீர், மோர், பானகம், தர்ப்பூசணி, வெள்ளரி, கொய்யா, பப்பாளி, சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை, அன்னாசி, நுங்கு போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களை எடுத்துக் கொண்டால் உடல் நீர்ச்சத்தோடு ஆரோக்கியமாக இருக்கும். தேவையில்லாமல் உடலுக்கு கேடு விளைவிக்கும் குளிர் பானங்களை அருந்த வேண்டாம். *எல்லோருக்கும் ஷேர் பண்ணுங்க*
News April 15, 2025
சிவகங்கை: கொலையில் 4 பேர் கைது

சிவகங்கை மாவட்டம் இருப்பான்பூச்சி கிராமத்தில் சரத்குமார் அவரது நண்பர் சிவசங்கருடன் பேசிக்கொண்டிருந்தார். அங்கு டூவீலரில் வந்த மர்ம கும்பல் இருவரையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினர். இதில் சரத்குமார் பலியானார். சிவசங்கர் காயமடைந்தார். கொலை செய்யப்பட்ட சரத்குமாரின் உறவினர்கள் நேற்று மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய விக்ரம், ஜனா, தவசகுடிபிரபு, சிவா 4 பேரை போலீசார் கைது கைது செய்தனர்.
News April 14, 2025
கூடைப்பந்து பயிற்றுனர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்ட விளையாட்டரங்கத்தில் கூடைப்பந்து பயிற்றுநராக பயிற்சி வழங்குவதற்கு, தேசிய விளையாட்டு நிறுவனம் (அ) இந்திய விளையாட்டு நிறுவனத்தால் வழங்கப்பட்ட முதுநிலை விளையாட்டு பயிற்சி சான்றிதழுடன் வருகின்ற 20.04.2025 அன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மைதானத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தகவல்.