News July 19, 2024
வரலாற்று சிறப்புமிக்க பொருட்கள் ஒப்படைக்க வலியுறுத்தல்

தருமபுரி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தனியார் வசமுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்கள் மற்றும் புத்தகங்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை தர்மபுரி மாவட்ட நிர்வாகத்திற்கு நன்கொடையாக வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி நேற்று வெளியிட்டுள்ள தனது செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 5, 2025
தருமபுரி: காவல்துறை சார்பில் பெட்டிஷன் மேளா

தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் இன்று (நவ.05) ஆம் தேதி காலை 10.00 மணி முதல் 2 மணி வரை தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.S.மகேஸ்வரன், தலைமையில் பொதுமக்களின் குறை தீர்க்கும் முகாம் (பெட்டிஷன் மேளா) நடைபெற்றது. இப்பெட்டிஷன் மேளாவில் பொதுமக்களால் வழங்கப்பட்ட 73 மனுக்கள் மீது விசாரணை செய்யப்பட்டு, 73 மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டது.
News November 5, 2025
இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம்

தர்மபுரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (05.11.2025) இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர், சிவராமன் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் சேகர் , தோப்பூரில் குமரவேல் , மதிகோன்பாளையத்தில் மகாலிங்கம் மற்றும் கிருஷ்ணாபுரத்தில் குப்புசாமி ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம்.
News November 5, 2025
தருமபுரி மக்களே – இன்று இதை கண்டிப்பாக பண்ணுங்க!

ஐப்பசி பெளர்ணமி நாளான இன்று (நவ.5) மாலை 5 மணிக்கு மேல் உங்களின் வீடுகளிலோ அல்லது அருகாமையில் உள்ள கோயில்களிலோ 5,7,11,21,51 அல்லது 101 என ஒற்றைப்படை எண்ணிக்கையில் மண் அகல் விளக்குகளை ஏற்றுங்கள். இப்படி வழிபடுவது குடும்பத்திற்கு மன நிம்மதி மற்றும் சிறப்பு தரும். அதேபோல், இந்த விளக்குகளை குறைந்தது 2 மணிநேரம் எரியும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். ஷேர் பண்ணுங்க!


