News March 27, 2026
வரலாற்றில் இன்று

➤1855 – புவியியலாளர் ஆபிரகாம் கெஸ்னர் மண்ணெண்ணெய்க்கான காப்புரிமையைப் பெற்றார். ➤1969 – நாசாவின் மரைனர் 7 என்ற ஆளில்லா தானியங்கி விண்கலம் செவ்வாய் கோளை நோக்கி ஏவப்பட்டது. ➤1998 – வயாகராவை மருந்தாக பயன்படுத்த அமெரிக்க அரசு அனுமதித்தது. ➤2005 – இந்திய இயற்பியலாளர் ரஞ்சன் ராய் டேனியல் மறைந்த நாள். ➤உலக நாடக அரங்க நாள்.
Similar News
News March 30, 2026
செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று (மார்ச்-29) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.30) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது
News March 30, 2026
CM பதவியை ராஜினாமா செய்கிறார் நிதிஷ் குமார்

சமீபத்தில் நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலில் பிஹாரில் இருந்து MP-ஆக நிதிஷ் குமார் தேர்வானார். இந்நிலையில் நாளை காலை 10 மணிக்கு தனது CM பதவியை அவர் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. JD(U) தொண்டர்களின் எதிர்ப்பையும் மீறி நிதிஷ் குமார் CM பதவியில் இருந்து விலகவுள்ளார். பாஜகவின் அழுத்தத்தின் பேரிலேயே அவர் பதவி விலகுவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன.
News March 30, 2026
அதிமுக தேர்தல் அறிக்கையை திமுக காப்பியடித்துள்ளது: EPS

கடந்த தேர்தலில் பெட்ரோல், டீசல் கேஸ் விலையை குறைப்பதாக சொன்ன வாக்குறுதியை திமுக நிறைவேற்றியதா என EPS கேள்வி எழுப்பியுள்ளார். நெல்லையில் பேசிய அவர், அதிமுக தேர்தல் அறிக்கையை திமுக காப்பியடித்துள்ளது; மக்கள் ஒருமுறை ஏமாந்துவிட்டார்கள்; மறுமுறையும் ஏமாற மாட்டார்கள் என்றார். கடந்த தேர்தலில் கொடுத்த 525 வாக்குறுதிகளில் கால்வாசி கூட நிறைவேற்றவில்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டினார். <<-se>>#TNElection2026<<>>


