News February 27, 2026
வரலாற்றில் இன்று

*1964 – சாய்ந்த கோபுரம் மேலும் சரியாமல் பாதுகாக்க இத்தாலிய அரசு உதவி கோரியது. *2002 – கோத்ரா ரயில் எரிப்பு. *2010 – சிலியில் 8.8 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 500 பேர் உயிரிழந்தனர். *1943 – இந்திய அரசியல்வாதி பி.எஸ்.எடியூரப்பா பிறந்த தினம். *2008 – தமிழக எழுத்தாளர் சுஜாதா இறந்த நாள்.
Similar News
News February 27, 2026
BREAKING: ரிங்கு சிங்கின் தந்தை காலமானார்!

இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரிங்கு சிங்கின் தந்தை கான் சந்த் சிங் காலமானார். கடந்த ஒரு வருடமாக கல்லீரல் புற்றுநோயுடன் போராடி வந்த அவர், நொய்டாவில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதன்காரணமாகவே ஜிம்பாப்வே அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில், ரிங்கு சிங் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP
News February 27, 2026
தைராய்டை குணமாக்கும் இயற்கை வைத்தியம்

பலரையும் பாதிக்கும் தைராய்டு பிரச்னையில் இருந்து குணமாக நம்மூர் இயற்கை மருத்துவம் உதவுகிறது. இப்பிரச்னை உள்ளவர்கள் கடல் பாசியை உணவில் சேர்த்து கொள்ளும்படி டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். இதில் அயோடின் சத்து அதிகம் என்பதால், தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டுக்கு பெரிதளவில் உதவுகிறது. மேலும் தொடர் மூச்சுப் பயிற்சி, யோகா & சூரிய நமஸ்காரம் செய்வதும் சிறந்தது என குறிப்பிடுகின்றனர். SHARE பண்ணுங்க.
News February 27, 2026
அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கவில்லை: விக்கிரமராஜா

அதிமுக கூட்டணிக்கு தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு ஆதரவு அளிக்கவில்லை என அதன் தலைவர் விக்கிரமராஜா விளக்கம் அளித்துள்ளார். நேற்று அவர் EPS-ஐ சந்தித்து அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்ததாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இந்நிலையில், TN முழுவதும் உள்ள வணிகர்களின் பிரச்னைகள் குறித்த பட்டியலை EPS-யிடம் வழங்கியதாகவும், கடந்த 5 ஆண்டுகளில் வணிகர்களின் பிரச்னை 70% தீர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


