News February 24, 2026

வரலாற்றில் இன்று

image

*1920 – புகழ்பெற்ற இந்திய யோகக்கலைப் பயிற்சியாளர் நானம்மாள் பிறந்த தினம். *1928 – தமிழகத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஏ.பி.நாகராசன் பிறந்த தினம். *1948 – தமிழக மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா பிறந்த தினம். *2009 – கலிபோர்னியாவில் வாட்ஸ்அப் தொடங்கப்பட்டது. *2018 – இந்தியத் திரைப்பட நடிகை ஸ்ரீதேவி மறைந்த நாள்.

Similar News

News April 6, 2026

தேர்தலுக்கு புதிய வியூகத்தை வகுத்த பாஜக!

image

TN தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. அரசியல் தலைவர்களும் தீவிர பிரசாரத்தை தொடங்கிய நிலையில், பாஜக புதிய வியூகத்தை வகுத்துள்ளது. பாஜக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் ’விவசாயிகளின் நண்பன் மோடி’ என்ற பெயரில் விவசாயிகளை சந்தித்து, PM-KISAN திட்டத்தில் ஆண்டுக்கு ₹6,000 வழங்கப்படுவது, பயிர் காப்பீடு உள்பட பல்வேறு திட்டங்களை எடுத்துக்கூறி வாக்கு சேகரிக்க பாஜக குழுவை அமைத்துள்ளது.

News April 6, 2026

அதிகமாக டீ, காபி குடிக்கிறீங்களா? எச்சரிக்கை!

image

ஒருநாளுக்கு 2 முறைக்கும் அதிகமாக டீ, காபி குடிப்பவர்களுக்கு பல பிரச்னைகள் ஏற்படும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். டீ-யில் உள்ள Tanin, காபியில் உள்ள கஃபைன் உடல் இரும்பு சத்தை உறிஞ்சவிடாமல் தடுக்கிறதாம். இதனால் ரத்தசோகை ஏற்படுகிறது. மேலும், High BP, அஜீரண கோளாறு, அல்சர், மூட்டு வலி, இருதய பிரச்னைகள் கூட வரும் என்கின்றனர். ஒருநாளுக்கு எத்தனை கப் டீ/காபி குடிப்பீங்க?

News April 6, 2026

செல்வப்பெருந்தகை வடசென்னை செல்ல கட்டுப்பாடு

image

திரு.வி.க. நகர் தொகுதியில் பொற்கொடி களமிறங்கிய நிலையில், வட சென்னை முழுவதும் ஆம்ஸ்ட்ராங் படுகொலையுடன் செல்வப்பெருந்தகையை தொடர்புபடுத்தியும், திமுகவுக்கு எதிராகவும் தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறதாம். இதுதொடர்பாக உளவுத்துறை ஸ்டாலினுக்கு ரிப்போர்ட் கொடுத்துள்ளது. இதனால், கொளத்தூர் உள்பட வட சென்னை பகுதிகளில் செல்வப்பெருந்தகை பிரசாரம் செய்ய வேண்டாம் என திமுக தலைமை அறிவுறுத்தியுள்ளதாம்.

error: Content is protected !!