News November 23, 2025
வரலாற்றில் இன்று

*1910 – சுவீடனில் கடைசி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
*1956 – அரியலூரில் நடந்த ரயில் விபத்தில் 142 பயணிகள் உயிரிழந்தனர்.
*1980 – இத்தாலியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் 4,800 பேர் உயிரிழந்தனர்.
*2007 – அரியலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
Similar News
News November 23, 2025
பாஜகவின் அடிமை விஜய்: TKS

திமுக கொள்ளை அடிப்பதாக கூறும் <<18365872>>விஜய் <<>>முதலில் அவர் கட்சியில் பதவிக்காக பணம் வாங்கும் குற்றச்சாட்டுக்கு பதில் சொல்ல வேண்டும் என TKS இளங்கோவன் தெரிவித்துள்ளார். தன் மீது தவறு இருப்பதால் தான் கரூர் விவகாரம் பற்றி விஜய் பேசவில்லை என்று கூறிய TKS, தமிழ்நாட்டுக்காக அவர் என்ன பேசியிருக்கிறார் என்றும் கேள்வி எழுப்பினார். பாஜக எழுதி தருவதையே பேசுவதாகவும், அவர் பாஜகவின் அடிமை என்றும் TKS விமர்சித்துள்ளார்.
News November 23, 2025
கனமழை.. நாளை பள்ளிகளுக்கு விடுமுறையா?

தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, குமரியில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், தமிழக பேரிடர் மீட்பு படை குழுக்களும் தயார் நிலையில் உள்ளன. கனமழை நீடித்தால் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படலாம். இதுகுறித்து இன்றிரவோ நாளை காலையோ கலெக்டர்கள் அறிவிக்க வாய்ப்புள்ளது.
News November 23, 2025
நடிகை அதா சர்மா வீட்டில் துயரம்.. கண்ணீர் அஞ்சலி

‘தி கேரளா ஸ்டோரி’ படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான அதா சர்மாவின் வீடே சோகத்தில் மூழ்கியுள்ளது. தனது பாட்டியுடன் எடுத்த குறும்பான போட்டோக்களை அவர் வெளியிடுவார். பாட்டி – பேத்தி காம்பினேஷனை ரசிக்க தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. அவர்களுக்கெல்லாம் சோக செய்தியாக, அதா சர்மாவின் பாட்டி இன்று காலமானார். தமிழில் சார்லி சாப்ளின் 2, இது நம்ம ஆளு உள்ளிட்ட படங்களில் அதா சர்மா நடித்துள்ளார்.


