News November 21, 2025
வரலாற்றில் இன்று

1947 – இந்தியா விடுதலை அடைந்த பின்னர் முதன் முறையாக அஞ்சல் தலை வெளியிடப்பட்டது
1963 – இந்தியாவின் முதலாவது ஈரடுக்கு உளவு ஏவுகணை நைக்-அப்பாச்சி ஏவப்பட்டது.
1991 – சுதந்திர போராட்ட வீரர் தி. சு.அவிநாசிலிங்கம் மறைந்தார்.
2022 – தமிழறிஞர் ஔவை நடராசன் மறைந்த தினம்.
Similar News
News November 21, 2025
இறுதி பணி நாள்: CJI கவாய் உருக்கம்!

CJI <<18345604>>BR கவாயின்<<>> இறுதி பணி நாள் இன்று. இந்நிலையில், டாக்டர் அம்பேத்கர் வழியில், அடிப்படை உரிமைகளை, அரசின் கொள்கைகளுடன் சமநிலைப்படுத்துவதன் மூலம் நீதியை நிலை நாட்ட முடிந்தவரை முயற்சித்ததாக கூறியுள்ளார். எளிமையாக தீர்ப்புகள் எழுதுவதில் நம்பிக்கை கொண்டுள்ளதாக கூறிய அவர், 1985-ல் சட்டம் படிக்க ஒரு மாணவனாக சேர்ந்த தான், இன்று நீதித்துறை மாணவனாகவே விலகுவதாக உருக்கமாக தெரிவித்துள்ளார்.
News November 21, 2025
மேலும் ஒரு வாரம்… பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களை திருத்தம் செய்ய வழங்கப்பட்டிருந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நவ.19-ம் தேதியுடன் அவகாசம் நிறைவடைந்த நிலையில், தற்போது நவ.27 வரை நீட்டித்து பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இந்த விவரங்கள் அடிப்படையிலேயே இறுதி மதிப்பெண் அச்சிடப்படும் என்பதால், பணிகளை கவனமாக மேற்கொள்ள HM-களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News November 21, 2025
BREAKING: பாஜகவில் இணையும் அதிமுக Ex எம்எல்ஏ

2 நாள்களுக்கு முன்பு புதுச்சேரி அதிமுகவிலிருந்து விலகிய <<18330707>>Ex MLA பாஸ்கர்<<>> பாஜகவில் இணைய உள்ளார். அதிமுகவிலிருந்து விலகிய பிறகு, புதுச்சேரியின் பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானாவை சந்தித்துப் பேசியுள்ளார். 2011-16, 2016-21 வரை முதலியார்பேட்டை தொகுதியில் வென்ற பாஸ்கர் அதிமுகவின் முக்கிய முகமாக இருந்து வந்தார். புதுச்சேரியில் NDA கூட்டணி ஆட்சி நடப்பது குறிப்பிடத்தக்கது.


