News November 19, 2025

வரலாற்றில் இன்று

image

1917 – முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாள்.
1946 – ஆப்கானிஸ்தான், ஐஸ்லாந்து, சுவீடன் ஆகிய நாடுகள் ஐநாவில் இணைந்தன.
1961 – நடிகர் விவேக் பிறந்தநாள்.
1976 – நடிகர் அருண் விஜய் பிறந்த தினம்.
1999 – சீனா தனது முதலாவது சென்சூ 1 விண்கலத்தை ஏவியது.
2008 – நடிகர் எம். என். நம்பியார் மறைந்தநாள்.

Similar News

News November 19, 2025

காட்டாட்சி முடிவுக்கு வரும்: நயினார் நாகேந்திரன்

image

<<18327587>>ராமேஸ்வரத்தில்<<>> பள்ளி மாணவி கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டது அதிர்ச்சியளிப்பதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்தபாடில்லை என்று விமர்சித்துள்ள அவர், பெண்களுக்கெதிரான ஆட்சி இனி தமிழகத்தில் தொடரக்கூடாது என்று கூறியுள்ளார். 2026-ல் திமுகவின் காட்டாட்சி முடிவுக்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News November 19, 2025

பொய் சொல்லும் CM ஸ்டாலின்: அன்புமணி

image

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக அரசு பொய் கூறுவதாக அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார். 5 ஆண்டுகளில் 5% முதலீடுகள் மட்டுமே செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக கூறிய அவர், வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய பயந்து ஓடுவதாக விமர்சித்துள்ளார். மேலும், பொய்யை தவிர CM-க்கு வேற எதுவும் தெரியவில்லை என்றும் போதிய முதலீடுகள் இல்லாததால் இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடுகின்றனர் எனவும் சாடினார்.

News November 19, 2025

BREAKING: வங்கி கணக்கில் ₹2,000 வந்தது.. செக் பண்ணுங்க

image

கோவை கொடிசியா வளாகத்தில், தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டை PM மோடி தொடங்கி வைத்தார். இதனையடுத்து, PM கிசான் திட்டத்தின் 21-வது தவணையான ₹2,000-ஐ மோடி விடுவித்தார். இதனால் விவசாயிகள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த தவணையை பெற தவறியவர்களுக்கு இந்த முறை 2 தவணைத் தொகையையும் (₹4,000) சேர்த்து வழங்க வழிவகை செய்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

error: Content is protected !!