News January 12, 2026

வரலாறு காணாத குறைவு.. மிகப்பெரிய தாக்கம்

image

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்து, ₹90.23-ஆக உள்ளது. டாலர் மதிப்பு உயர்வதால், இந்தியாவின் இறக்குமதி செலவினம் அதிகரிக்கும். இதன்காரணமாக, சமையல் எண்ணெய்கள், பருப்பு, உரங்கள், எரிவாயு ஆகியவற்றுக்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். அதுமட்டுமல்லாமல், தங்கம், வெள்ளி விலையும் அதிகரிக்கும். இது அனைத்து தரப்பு மக்களையும் கடுமையாக பாதிக்கும்.

Similar News

News February 2, 2026

₹5-க்கு TNEB கார்டு.. பெறுவது எப்படி?

image

EB ரீடிங் எடுக்க ஆள் வரும் போதுதான், கார்ட் எங்கு வைத்தோம் என பல வீடுகளிலும் தேடுவோம். பல நேரங்களில் அந்த கார்ட் தொலைந்து போயிருக்கலாம். அப்படி தொலைந்துவிட்டால், பதற வேண்டாம். உங்க ஏரியாவின் EB ஆபிஸுக்கு சென்று, ₹5 கொடுத்து புதிய EB கார்டை பெற்றுக் கொள்ளுங்க. அதேபோல, அட்டை முழுமையாக யூஸ் செய்துவிட்டால், இலவசமாகவே புதிய EB கார்ட் பெறலாம். பலருக்கும் தெரியாத இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News February 2, 2026

டிவியை உடைத்த கமல் திமுகவில் சேர்ந்தது சரியா?

image

திமுக கொடுத்த இலவச டிவியை உடைத்த கமல், பின்னர் அக்கட்சியுடன் இணைந்தது குறித்த விமர்சனத்துக்கு சிநேகன் விளக்கமளித்துள்ளார். ரிமோட்டையும், டிவியையும் புதிதாக வாங்கிக்கொள்ள எங்களுக்கு தெம்பு இருக்கிறது என்றும், ஆனால் இந்த மாநிலம் உடைந்து போகக்கூடாது என்பதற்காக நியாயத்தின் பக்கம் நிற்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார். எங்கள் கட்சியைவிட மாநிலமே இப்போது முக்கியம் என்றும் கூறியுள்ளார்.

News February 2, 2026

திமுகவிடம் இத்தனை தொகுதிகளை கேட்கிறது CPM

image

திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை CPM தொடங்கியுள்ளது. கடந்த முறை 6 தொகுதிகளில் போட்டியிட்டு கீழ்வேளூர், கந்தர்வக்கோட்டை தொகுதியில் வென்ற இக்கட்சி, இம்முறை 15 தொகுதிகளை கேட்டுள்ளதாம். மதுரவாயல், பெரம்பூர்(சென்னை), கீழ்வேளூர்(நாகை), கந்தர்வக்கோட்டை(புதுக்கோட்டை), விளவங்கோடு, கிள்ளியூர்(கன்னியாகுமரி) உள்ளிட்ட தொகுதிகள் அடங்கிய விருப்ப பட்டியலை வழங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!