News April 25, 2024

வரதராஜ பெருமாள் கோவிலில் ராமர் பட்டாபிஷேகம்

image

புதுச்சேரி காந்தி வீதி வேதபுரீஸ்வரர், வரதராஜ பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள கோதண்டராம சுவாமிக்கு ராம நவமி உற்சவம், திருக்கல்யாண உற்சவம் மற்றும் ராமர் பட்டாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
முக்கிய நிகழ்வாக வரும் 30 ஆம் தேதி தெப்ப உற்சவமும், 1 ஆம் தேதி முத்து பல்லாக்கு வீதியுலாவும், 2 ஆம் தேதி ஊஞ்சல் உற்சவமும் நடைபெற உள்ளது.

Similar News

News January 3, 2026

புதுச்சேரியில் மருத்துவ மாணவர் கைது

image

புதுச்சேரி, அரியாங்குப்பம் ஆர்.கே.நகர், வாலிபால் மைதானம் அருகே வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவரை போலீசார் மடக்கிப் பிடித்து சோதனை செய்ததில், 1,460 கிராம் கஞ்சா வைத்திருந்ததைக் கண்டுபிடித்தனர். விசாரணையில், அவர் டில்லியைச் சேர்ந்த லக் ஷ்யவிஜ் என்பதும், அவர் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் பயின்று வருவதும் தெரிய வந்ததையடுத்து, அவரை கைது செய்தனர்.

News January 3, 2026

புதுச்சேரியில் 8,781 வழக்குகள் பதிவு

image

புதுச்சேரியில் 2025-ம் ஆண்டு காவல் நிலையங்களில் 8,781 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது 2024-ஐ விட 1,534 வழக்குகள் அதிகம் என புதுச்சேரி காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளனர். ரெட்டியார் பாளையத்தில் 1,395 வழக்குகள், மேட்டுப்பாளையத்தில் 215, லாஸ்பேட்டையில் 282, கோரிமேட்டில் 261, சேதரப்பட்டில் 103 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என புதுச்சேரி காவல்துறை அறிவித்துள்ளனர்.

News January 3, 2026

புதுச்சேரி: பொதுமக்கள் குறைதீர்வு முகாம் அறிவிப்பு

image

புதுச்சேரி டிஜிபி ஷாலினி சிங் உத்தரவுப்படி ஒவ்வொரு சனிக்கிழமையும், அனைத்து காவல் நிலையங்களிலும் பொதுமக்கள் குறை தீர்வு நாள் முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி நாளை மூன்றாம் தேதி சனிக்கிழமை அனைத்து காவல் நிலையங்களிலும் முகாம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் கலந்து கொண்டு குறைகளை தெரிவிக்கலாம் என சீனியர் எஸ்பி கலைவாணன் இன்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!