News March 4, 2026

வரகு அரிசியின் ஆரோக்கிய நன்மைகள்

image

சிறுதானியமான வரகு அரிசியில் உடலுக்கு தேவையான பல நன்மைகள் இருக்கின்றன. வரகு அரிசியில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் உடல் எடையை குறைக்க முடியாமல் சிரமப்படுவார்கள் அதை உணவில் சேர்க்கலாம். அத்துடன், சர்க்கரையின் அளவு குறைந்து நீரிழிவு நோய் கட்டுக்குள் வரும் என்றும் கூறப்படுகிறது. அதேபோல வயிறு, குடலில் உள்ள புண்கள் குணமாகும். மாதவிடாய் பிரச்னைகள் தீர பெண்கள் இதை சாப்பிட டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Similar News

News April 9, 2026

புதுச்சேரியை ஆளப் போவது யார்? தொடங்கும் வாக்குப்பதிவு!

image

புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. மொத்தம் 1,099 வாக்குப்பதிவு மையங்களில் நடைபெறும் இத்தேர்தலில் 5 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு ஆளும் NR காங்கிரஸ் – பாஜக கூட்டணி, காங்கிரஸ் – திமுக கூட்டணி, தவெக மற்றும் நாதக என 4 முனைப் போட்டி நிலவும் நிலையில், மொத்தம் 294 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர்.

News April 9, 2026

தீராத பிரச்னைகளை தீர்க்கும் வெண்பூசணி வழிபாடு

image

புதுக்கோட்டை, திருமயத்தில் 350 ஆண்டுகள் பழமையான கோட்டை பைரவர் கோயில் அமைந்துள்ளது. தமிழகத்திலேயே வடக்கு பார்த்தபடி, தனிக்கோயில் கொண்டருளும் பைரவர் தலம் இது ஒன்றே. இக்கோயிலில் தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு வெண்பூசணி விளக்கேற்றி வழிபடுவது, அனைத்து பிரச்னைகளையும் தீர்க்க உதவுமாம். பைரவருக்கு சந்தனக்காப்பு, வடைமாலை சாற்றி வழிபட்டால் வியாபாரம், தொழில் அபிவிருத்தி ஏற்படும் என்பது நம்பிக்கை.

News April 9, 2026

தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!

image

சத்தீஸ்கர் முதல் மன்னார் வளைகுடா வரை வளி மண்டலத்தில், ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் நாளை, நாளை மறுநாள் மிதமான மழை பெய்யும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. வெளியில் செல்லும்போது முன்னெச்சரிக்கையாக குடையோடு போங்க.

error: Content is protected !!