News November 6, 2025
வயிற்று கொழுப்பை கரைக்க காலையில் இத பண்ணுங்க!

Russian Twist உடற்பயிற்சியை செய்வது அடிவயிற்று கொழுப்பை கரைக்க உதவும் ✦செய்முறை: தரையில் கால் முட்டியை மடக்கிய படி, பாதங்கள் தரையில் படாதவாறு அமரவும்.(படத்தில் உள்ளது போல) பேலன்ஸுக்காக முதுகை பின்னோக்கி வளைத்து, வயிற்று தசைகளை இறுக்கமாக வைக்கவும். கைகளை சேர்த்து வைத்து, உடலை வலதுபுறமாக திருப்பவும். அதே போல, இடதுபுறமாக திருப்பவும். இதே போல, மாறி மாறி 15- 20 முறை என 2 செட்களாக செய்யலாம்.
Similar News
News February 12, 2026
அமைச்சர்களின் தொகுதிகளை கேட்கும் கம்யூனிஸ்டுகள்?

KN நேருவின் திருச்சி மேற்கு தொகுதியையும், அன்பில் மகேஸின் திருவெறும்பூர் தொகுதியையும் திமுகவிடம் கம்யூனிஸ்டு கட்சிகள் கேட்பதாக கூறப்படுகிறது. இந்த 2 தொகுதியிலும், கிளை அமைப்பு வரை கட்சி வலுவாக இருப்பதாக 2 கட்சிகளும் கருதுகிறதாம். ஏற்கெனவே, கேட்கும் தொகுதிகளை கொடுக்கமாட்டோம் என திமுக நிர்ப்பந்திப்பதாக கூறப்படும் நிலையில், கம்யூனிஸ்டுகளுக்கு இந்த தொகுதிகள் ஒதுக்கப்படுமா என சந்தேகம் எழுந்துள்ளது.
News February 12, 2026
செல்போனில் உடனே இதை மாத்துங்க.. முக்கிய ALERT

ஆண்ட்ராய்டு(Android) 12 அல்லது முந்தைய வெர்ஷன் Software உடன் இயங்கி வரும் செல்போன்களில் இனி Security அப்டேட் கிடையாது என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. எனவே உடனடியாக உங்கள் போனில் உள்ள Software வெர்ஷனை செக் செய்து அப்டேட் செய்து கொள்ளுங்கள். இல்லை எனில் டேட்டா திருட்டு, சைபர் தாக்குதல் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு ஆளாக நேரிடும். இதை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News February 12, 2026
சுவாசப் பிரச்னையா.. குணமாக்கும் கசாயம்!

◆தேவையான பொருள்கள்: ஆடாதோடை, தூதுவளை, துளசி, கண்டங்கத்திரி, மிளகு ◆செய்முறை: 2 கப் தண்ணீரில் ஆடாதோடை, தூதுவளை, துளசி, கண்டங்கத்திரி, மிளகு ஆகியவற்றை தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து கஷாயம் பதத்திற்கு தயார் செய்து கொள்ளவும். இதனை வாரத்துக்கு 2 முறை பருகினால் சுவாச மண்டல நோய் பாதிப்புகளிலிருந்து விடுபடலாம் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள்.


