News April 3, 2025
வயலூர் முருகன் கோயிலில் சஷ்டி வழிபாடு

பங்குனி மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு இன்று திருச்சி வயலூர் முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. வளர்பிறை சஷ்டி நாட்களில் முருகனை வழிபட்டால் நீண்ட காலமாக தீராத பிரச்சனைகள் தீரும் என்பது ஐதீகம். அந்த வகையில் இன்று வயலூர் முருகன் கோவிலில் வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை வழிபட்டு சென்றனர். SHARE NOW!
Similar News
News April 7, 2026
திருச்சி: உங்க பெயரில் நிலம் இருக்கா? உடனே செக் பண்ணுங்க!

நில உரிமையாளர்களே சிட்டா, புலப்படம் (FMB) மற்றும் அடங்கல் ஆகியவற்றை தனித்தனியாக பதிவிறக்கம் செய்வதற்கு பதிலாக, இனி https://eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் ஒருங்கிணைந்த நில ஆவணமாக பெற்றுக்கொள்ளலாம். இதற்காக மாவட்டம், வட்டம் மற்றும் புல எண் விவரங்களை உள்ளீடு செய்து, வங்கி மற்றும் அரசு தேவைகளுக்கான ஆவணங்களை எளிதாகப் பதிவிறக்கம் செய்யலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News April 7, 2026
திருச்சி: B.E படித்தவர்களுக்கு ரூ.50,500 சம்பளம்!

மத்திய அரசு நிறுவனமான BSNL-ல் காலியாக உள்ள Senior Executive Trainee பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 120
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.24,900 – ரூ.50,500
5. கல்வித்தகுதி: B.E/B.Tech, CA/CMA
6. கடைசி தேதி: 16.04.2026
7. விண்ணப்பிக்க: <
இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!
News April 7, 2026
திருச்சி: ஈரோடு பயணிகள் ரயில் பகுதியாக ரத்து

ஈரோட்டில் இருந்து காலை 8:05 மணிக்கு புறப்படும் ஈரோடு – திருச்சி பயணிகள் ரயிலானது வரும் ஏப்.10-ம் தேதி ஒரு நாள் மட்டும், ஈரோடு – திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் ஈரோடு ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இருந்து, திருச்சி கோட்டை ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


