News April 13, 2024

வயலில் பயிர் செடி எடுத்து வாக்கு சேகரித்த வேட்பாளர்

image

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பாபு சீர்காழியில் இன்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 4வது வார்டில் உள்ள வீடுகளுக்கு சென்று துண்டு பிரசுரம் வழங்கி வாக்கு சேகரித்தார். தொடர்ந்து அங்குள்ள வயலில் பயிர்செடி எடுத்து விவசாயிகளிடம் இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார். மகளிர் அணி செயலாளர் சக்தி நகர தேர்தல் பொறுப்பாளர் மார்கோனி உடன் இருந்தனர்.

Similar News

News October 17, 2025

மயிலாடுதுறை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், மயிலாடுதுறை சீர்காழி உட்கோட்டங்களில் உட்பட்ட 14 காவல் நிலையங்களுக்கும் நேற்று(அக்.16) இரவு 11 மணி முதல், இன்று(அக்.17) காலை 8 மணி வரை இரவு ரோந்து செல்லும் போலீசாரின் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொலைபேசி எண்ணும் தெரிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 16, 2025

மயிலாடுதுறை: சிலிண்டர் வேண்டுமா? ஒரு Message போதும்!

image

மயிலாடுதுறை மக்களே உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். இதை SHARE பண்ணுங்க!

News October 16, 2025

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஆய்வு

image

மயிலாடுதுறை அரசு பெரியார் மாவட்ட தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் இன்று நேரில் பார்வையிட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். மேலும் மருத்துவர்கள் செவிலியர்கள் வருகை பதிவேடுகளை பார்வையிட்டு மருந்து மாத்திரை கையிருப்பு விவரங்களை கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.

error: Content is protected !!