News October 24, 2024
வன்கொடுமை குறித்து புகார் தெரிவிக்கலாம்: கலெக்டர் அறிவிப்பு

நீலகிரி மாவட்டத்தில் வன்கொடுமை குறித்து இலவச அழைப்பு எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என கலெக்டர் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “ஜாதி வன் கொடுமையால் பாதிக்கப்பட்ட பழங்குடியினர், ஆதிதிராவிடர், பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக தகவல் தெரிவிப்போர்கள் – 18002021989 & 14566 என்ற இலவச தொலைபேசி எண்களை பயன்படுத்தி புகார்களை பதிவு செய்யலாம் என தெரிவித்துள்ளனர்.
Similar News
News November 3, 2025
நீலகிரி: கரண்ட் பில் அதிகமா வருதா?

நீலகிரி மக்களே கரண்ட் பில் அதிகமா வருதா? கவலையை விடுங்க இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. உரிய ஆவணங்களுடன் தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம்.அல்லது 94987-94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்!
News November 3, 2025
நீலகிரி: 10வது படித்தால் அரசு வேலை ரெடி!

நீலகிரி மக்களே, தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 1483 கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாதம் ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News November 3, 2025
நீலகிரி: கேன் தண்ணீர் பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு!

நீலகிரி மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


