News January 23, 2025
வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார்களுக்கு தீர்வு
புதுச்சேரி ஆட்சியர் குலோத்துங்கன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்கள் புகார்களுக்கு தீர்வு காண, மாவட்ட உள்ளூர் புகார் குழுவின் தலைவரை 8825425745 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை 0413-2299500 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
Similar News
News January 23, 2025
புதுவை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சி மைய துணை இயக்குநர் ஷ்வேதா விஸ்வநாதன் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், ஆடவருக்கான கோ-கோ, கபடி, கையுந்து பந்து ஆகிய விளையாட்டுப் போட்டிகளுக்கு புதுச்சேரி இலாசுப்பேட்டை பயிற்சி மையத்தில் தங்கியிருந்து பயிற்சி பெற தோ்வுகள் நடைபெறவுள்ளன 27, 28, 29 ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடைபெறும் சேர்க்கைகான விண்ணப்பம் தேர்வு நாளன்று வழங்கப்படும்.
News January 22, 2025
மாணவர்கள் விரும்பும் உயர் கல்வியை உருவாக்கியுள்ளோம்
புதுச்சேரி கலை பண்பாட்டு துறை சார்பில் கருவடிக்குப்பத்தில் உள்ள காமராஜர் மணி மண்டபத்தில் குழந்தைகள் புத்தக விளையாட்டு கண்காட்சியை இன்று தொடங்கி வைத்து பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, உயர்கல்வியில் மாணவர்கள் எந்த பாடத்தை விரும்பினாலும், அதை படிக்கலாம் என்ற நிலையை உருவாக்கியுள்ளோம். இடம் இல்லை என்ற நிலையே புதுச்சேரியில் இல்லை, மாணவர்கள் நன்றாக படித்து முன்னேற வேண்டும் என்றார்.
News January 22, 2025
பல்கலை மாணவியிடம் அத்துமீறல்: முதல்வருடன் ஆலோசனை
முதல்வர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் போலீஸ் டி.ஜி.பி. ஷாலினி சிங்கை புதுச்சேரி சட்டசபைக்கு இன்று வரவழைத்தனர். இருவரும், தொழில்நுட்ப பல்கலையில் மாணவி மீதான தாக்குதல், வழக்கு விபரம், போலீஸ் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து கேட்டறிந்தனர். தொடர்ந்து இப்பிரச்னையில் கடும் நடவடிக்கை எடுக்கவும், தேடப்பட்டு வரும் நபரை விரைந்து கைது செய்ய உத்தரவிட்டனர்.