News November 20, 2024
வனவிலங்கு கண்காணிப்பு குழுவில் தென்காசியைச் சேர்ந்தவர்கள்

தமிழக அரசு நெல்லை வனவிலங்கு சரணாலயம் கண்காணிப்பு குழு அமைத்து அரசாணை ஒன்று இன்று வெளியிட்டுள்ளது. இதில் நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைவராகவும், தென்காசி செங்கோட்டை கடையநல்லூர் சிவகிரி ஆகிய வட்டங்களைச் சேர்ந்த தாசில்தார்கள், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் உறுப்பினர் ராஜாராம், பராசக்தி கல்லூரி பேராசிரியர் செல்வி உள்ளிட்ட 10 பேர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
Similar News
News December 13, 2025
தென்காசி: VAO லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்?

தென்காசி மக்களே, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது VAO-வின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் (04633-299544) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க
News December 13, 2025
தென்காசி: டூவீலர் விபத்தில் பரிதாப பலி

புளியங்குடி வீரப்பசாமி கோவில் தெருவை சேர்ந்த மைதீன் (36) என்பவர் நேற்று இரவு புளியங்குடி – சிந்தாமணியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே தனது டூவீலரில் வந்து கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்து கொண்டிருந்த வேன் டூவீலரில் மோதியதில் பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.
News December 13, 2025
தென்காசி: 10th தகுதி.. ரூ.56,900 சம்பளத்தில் வேலை ரெடி

தென்காசி மக்களே மத்திய அரசின் புலனாய்வு பிரிவில் (Intelligence Bureau) பல்வேறு பணிகளுக்கு 362 காலியிடங்கள் அறிவிக்கப்ட்டுள்ளன. இதற்கு 10th படித்தவர்கள் <


