News October 8, 2024

வனத்துறை நடை பயணத்திற்கு அழைப்பு

image

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே தென்பழனி வனத்துறை சோதனைச் சாவடியில் மேகமலை கோட்ட துணை இயக்குனர் முன்னிலையில் வன உயிரின வாரத்தை கொண்டாடும் விதமாக நாளை அக்.09ஆம் தேதி 4 கி.மீ தூரம் நடைபயணம் நடைபெற உள்ளது. இந்த நடை பயணத்தில் பள்ளி, கல்லூரி மற்றும் இளைஞர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என தேனி மாவட்ட வனத்துறையின் சார்பில் அழைப்பு விடப்பட்டுள்ளது.

Similar News

News November 20, 2024

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத்திருத்தம் முகாம்

image

தேனி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் முகாம் இரண்டு கட்டமாக 23 மற்றும் 24 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா தெரிவித்தார். பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்களுக்கு தேவையான முகவரி மாற்றம், பிழைத்திருத்தம், புகைப்பட மாற்றம் போன்ற குறைகள் தெரிவிக்கலாம் என்றார்.

News November 20, 2024

தேனியில் நவ.23ம் தேதி கிராமசபை கூட்டங்கள் – ஆட்சியர் 

image

தேனி மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் வருகிற 23ஆம் தேதி நடக்கிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா தெரிவித்துள்ளார். அன்று நடைபெற இருந்த கிராம சபைக்கூட்டமானது, நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டது. மேற்படி ஒத்திவைக்கப்பட்ட கிராம சபை கூட்டமானது அன்று முற்பகல் 11.00 மணியளவில் ஊராட்சி மன்றத்தலைவர்களால் நடத்தப்படுகிறது என்றார்.

News November 20, 2024

தேனியில் மாதாந்திர உதவித்தொகை வழங்கும் முகாம்

image

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ், 18 வயதுக்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு தளர்த்தி மாதாந்திர உதவித்தொகை வழங்கும் சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகள் சுயமாகவும், தன்னிச்சையாகவும் செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக முதல்வர் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார் என்றார்.