News November 5, 2024
வனத்துறை காவலர் பணியிடை நீக்கம்
கன்னியாகுமரி வனக்கோட்டம், பூதப்பாண்டி வனச்சரகத்திற்குட்பட்ட அரசு மரமண்டி, வடசேரியில் பணிபுரிபவர் மிகைப்பணியிட காவலர் எஸ்.பால்ராஜ். இவர் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரின காப்பாளர், ஆணையின் படி தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்தகவலை செய்திமக்கள் தொடர்பு துறை வெளியிட்டுள்ளது.
Similar News
News November 20, 2024
குமரி ஆட்சியர் இன்று ஆய்வு நடத்தும் இடங்கள்
இன்று (நவ.20) காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணிவரை “உங்களை தேடி உங்கள் ஊரில் ” திட்டப்படி மாவட்ட ஆட்சியர் அழக மீனா ஆய்வு நடத்தும் இடங்கள்: வேர்க்கிளம்பி பேரூராட்சி அலுவலகம், குமரன்குடி கிராம நிர்வாக அலுவலகம், PACB, அங்கன்வாடி, திருவட்டார் பஸ் நிலையம், காவல் நிலையம், சார்பதிவகம், G.H.S. அரசு பணிமனை, குலசேகரம் அரசு ஆஸ்பத்திரி, தீயணைப்பு நிலையம், பேச்சிப்பாறை ஆரம்ப சுகாதார நிலையம், வானிலை மையம்.
News November 19, 2024
சுசீந்திரம் கோவிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தரிசனம்
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் ஶ்ரீ தாணுமாலய சுவாமி திருக்கோவிலில் இன்று (நவ.19) நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தார். மேலும் அங்குள்ள சுற்று பிரகாரத்தை சுற்றி மனம் உருகி பிரார்த்தனை செய்தார். தொடர்ந்து அங்கு வந்த பக்தர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
News November 19, 2024
குமரியில் திடீர் ஆய்வு – 11 கடைகளுக்கு அபராதம்
குமரி பேரூராட்சி & உணவு பாதுகாப்பு துறை இணைந்து குமரியில் உள்ள கடைகள், தற்காலிக உணவு கடை என 60 கடைகளில் இன்று (நவ.19) ஆய்வு நடத்தியது. இதில் 7 கிலோ பிளாஸ்டிக் பை, 18 கிபிளாஸ்டிக் தட்டுகள் பறிமுதலுடன், காகிதத்தில் வைத்த 5 கிலோ வடை, பஜ்ஜி, சமோசா உணவு அழிக்கப்பட்டன. சுகாதாரமற்ற 3 உணவகங்களுக்கு ரூ. 3000 அபராதமும், பிளாஸ்டிக் வைத்திருந்த 8 கடைகளுக்கு தலா 2000 வீதம் ரூ.16000 அபராதம் விதிக்கப்பட்டது.