News March 28, 2025

வனத்துறை அமைச்சர் பொன்முடி குறும்படத்தை வெளியிட்டார்.

image

சென்னை தலைமைச் செயலகத்தில் வனத்துறை அமைச்சர் பொன்முடி திண்டுக்கல் மாவட்டம், காசம்பட்டி கிராமத்தில் 4.97 ஹெக்டேர் அளவிலான பகுதி பல்லுயிர் பாரம்பரிய தலமாக (Bio diversity Heritage Site) அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது தொடர்பான குறும்படத்தை வெளியிட்டார். இந்நிகழ்வின்போது சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்

Similar News

News December 27, 2025

சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி தடத்தில் நாளை 8 ரயில்கள் ரத்து

image

சென்னை ரயில் பாதை பராமரிப்புப் பணி காரணமாக நாளை (டிச.28) சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி இடையே 8 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. இதற்கு மாற்றாக எண்ணூர் – சென்ட்ரல் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். மேலும், பயணிகளின் கோரிக்கையை ஏற்று ஜனவரி 1 முதல் சென்னை – திருவனந்தபுரம் விரைவு ரயில் மொரப்பூர் நிலையத்தில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News December 27, 2025

தற்கொலைக்கு முயன்ற பெண் தூய்மை பணியாளர்

image

சென்னை உயர்நீதிமன்றம் வளாகம் முழுவதும், தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திடீரென ஒரு பெண் தூய்மை பணியாளர் சாலையில் சென்று கொண்டிருந்த காரின் கீழ் தற்கொலை செய்து கொள்வதாக கூறிவிட்டு, காரின் டைரில் கீழே விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவருக்கு கீழே விழுந்தால் சிறிது காயம் ஏற்பட்டுள்ளது உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

News December 27, 2025

சென்னை: சிசிடிவி டெண்டருக்கு தடை மறுப்பு

image

சென்னை காவல்துறையின் சிசிடிவி கேமரா பொருத்தும் டெண்டர் நடைமுறைகளுக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்தது. டெண்டரில் குறைபாடுகள் உள்ளதாக மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அரசு தரப்பில் அவகாசம் நீட்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நீதிமன்றம் தடை இன்றி விசாரணையை ஜனவரிக்கு ஒத்திவைத்துள்ளது.

error: Content is protected !!