News February 26, 2025
வனத்துறையினரால் மாடுகளை விற்பனை செய்யும் மக்கள்

சின்னமனூா் ஹைவேவிஸ் பேரூராட்சியில் மேகமலை உள்ளிட்ட 7 மலைக் கிராமங்கள் உள்ளன. இங்குள்ள தோட்டத் தொழிலாளர்கள் வீடுகளில் ஆடு, மாடுகளை வளா்த்து வருகின்றனா். தற்போது வனப்பகுதியில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு செல்லக்கூடாது என வனத்துறையினர் மலைக்கிராமத்தினருக்கு தடை விதித்துள்ளனர். இதனால் கால்நடைகளுக்கு தேவையான தீவனம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் கால்நடைகளை குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
Similar News
News March 3, 2026
தேனியில் மகளிர் தின மாரத்தானில் பங்கேற்க அழைப்பு

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, இந்திய விளையாட்டு ஆணையம் மற்றும் மை பாரத் தேனி இணைந்து பெண்களிடையே விளையாட்டை ஊக்குவிக்க வரும் மார்ச் 8-ஆம் தேதி காலை 9 மணிக்கு தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஓட்டப்பந்தயப் போட்டிகளை நடத்துகின்றன. பங்கேற்க விருப்பமுள்ள பெண்கள் மற்றும் மாணவிகள் 73392 26004 என்ற எண்ணில் மார்ச் 6-ம் தேதி முன்பதிவு செய்து கொள்ளலாம் என கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.
News March 3, 2026
தேனி: இந்த எண்களை SAVE பண்ணிக்கோங்க!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091.
இதனை SHARE பண்ணுங்க..
News March 3, 2026
தேனி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விபரம்:

தேனி மாவட்ட அணைகளின் (மார்.03) நீர்மட்டம்: வைகை அணை: 42.26 (71) அடி, வரத்து: 128 க.அடி, திறப்பு: 972 க.அடி, பெரியாறு அணை: 116.50 (142) அடி, வரத்து: இல்லை, திறப்பு: 444 க.அடி, மஞ்சளார் அணை: 46.60 (57) அடி, வரத்து: இல்லை, திறப்பு: இல்லை, சோத்துப்பாறை அணை: 110.54 (126.28) அடி, வரத்து: இல்லை, திறப்பு: 3 க.அடி, சண்முகா நதி அணை: 26.25 (52.55) அடி, வரத்து: இல்லை, திறப்பு: இல்லை.


