News January 26, 2026
வந்தே மாதரம் பாடலுக்கும் எழுந்து நிற்கும் விதி

தேசிய கீதம் போல வந்தே மாதரம் பாடலுக்கும் எழுந்து நிற்கும் விதியை கொண்டு வருவதற்கு உள்துறை அமைச்சகம் பரிசீலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது, 1971-ல் கொண்டுவரப்பட்ட தேசிய கௌரவ அவமதிப்பு தடுப்புச் சட்டமானது தேசிய கீதத்திற்கு மட்டுமே பொருந்தும். எனவே, வந்தே மாதரம் பாடலுக்காக சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து உங்கள் கருத்து என்ன? கமெண்ட்ல சொல்லுங்க.
Similar News
News February 3, 2026
உடல் உறுப்புகளுக்கு இதெல்லாம் ரொம்ப பிடிக்கும்

உங்கள் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு விருப்பமான பழக்கம் உண்டு. அதில் சில முக்கியமான உறுப்புகள், அதன் செயல்பாட்டை சிறப்பாக வைத்திருக்க, என்ன செயல்கள் உதவியாக இருக்கும் என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோல், உங்களுக்கு தெரிந்த தகவலை கமெண்ட்ல சொல்லுங்க. SHARE IT.
News February 3, 2026
சம்பளம் ₹2,000 உயர்கிறது.. இனிப்பான செய்தி

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2026-ம் ஆண்டின் தொடக்கமே இனிப்பான செய்தியுடன் தொடங்கியுள்ளது. ஊழியர்களின் அகவிலைப்படி 58% இருந்து 63% ஆக உயரவுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, ஒரு ஊழியரின் அடிப்படைச் சம்பளம் (Basic Pay) ₹40,000 என்று வைத்துக்கொண்டால், பழைய DA படி (58%) ₹23,200 இருக்கும் சம்பளம், புதிய DA (63%) படி ₹25,200 ஆக உயரும். இதன்மூலம் ₹2,000 வரை சம்பளம் அதிகமாக கிடைக்கும்.
News February 3, 2026
இரண்டாக உடைந்த TN காங்கிரஸ்: நிர்மலா சீதாராமன்

திமுக இன்றி தமிழ்நாட்டில் காங்கிரஸ் என்ற கட்சியே இருக்காது என FM நிர்மலா சீதாராமன் விமர்சித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டில் காங்கிரஸ் இரண்டாக உடைந்துள்ளதாகவும், ஒரு தரப்பு தவெகவுடன் கூட்டணி அமைக்கவும், மற்றொரு தரப்பு திமுகவுடன் கூட்டணி அமைக்கவும் விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். TN காங்கிரஸ் பெரும் குழப்பத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


