News February 11, 2026
வந்தே மாதரம்… இனி நீக்கப்பட்ட வரிகளையும் பாட உத்தரவு!

வந்தே மாதரம் பாடலில் நாட்டை பெண் தெய்வங்களுடன் ஒப்பிடும் வரிகள் இருப்பதால் சிறுபான்மையினரின் உணர்வுகளைக் கருத்தில் கொண்டு, 1937-ல் முதல் இரண்டு பத்திகளை மட்டும் தேசியப் பாடலாக காங்., அங்கீகரித்தது. அது 1950-ல் அதிகாரப்பூர்வமானது. இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த பாஜக அரசு, தற்போது நீக்கப்பட்ட வரிகளையும் சேர்த்தே வந்தே மாதரத்தை இசைக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
Similar News
News February 12, 2026
தவெகவில் இருந்து விலக சிலர் முடிவு: விஜய்க்கு அதிர்ச்சி

தேர்தலில் ‘சீட்’ இல்லை என்ற தலைமையின் முடிவால் தவெகவில் இருந்து சில மா.செ.,க்கள் விலக திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 10-ம் தேதி நடந்த மா.செ.,க்கள் கூட்டத்தில் பேசிய புஸ்ஸி ஆனந்த், சில மாவட்டங்களின் பெயர்களை குறிப்பிட்டு அங்கு சீட்டு இல்லை என்றால் ‘தளபதியின் வெற்றிக்காக உழைக்க வேண்டும்’ எனக் கூறினார். இது பலரையும் அப்செட் ஆக்கியதோடு, விலகல் முடிவுக்கு தள்ளியதாக கூறப்படுகிறது.
News February 12, 2026
TTV-க்கு எதிராக திரும்பியுள்ளாரா சசிகலா?

விரைவில் புதிய கட்சி தொடங்கி, தவெக கூட்டணியில் சசிகலா இணையவிருப்பதாக பேசப்படுகிறது. இது தொடர்பாக சசிகலாவின் தம்பி திவாகரனும், விஜயை சந்தித்து பேசியுள்ளாராம். அத்துடன் அமமுகவை உடைக்க சசிகலா பிளான் போட்டிருக்கிறார் என்கின்றனர். இதற்காக அமமுகவில் உள்ள முக்கிய நிர்வாகிகளிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். இந்நிலையில், சசிகலா கட்சியில் இணைய பலர் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
News February 12, 2026
தங்கம் விலையில் நிகழ்ந்த திடீர் மாற்றம்

சர்வதேச சந்தையில் கடந்த சில தினங்களாக மந்தநிலையில் இருந்து வந்த தங்கம் நேற்று மாலை திடீரென ஏற்றம் கண்டது. அதன் தாக்கத்தாலேயே இந்திய சந்தையில் நேற்று மாலை <<19112680>>சவரனுக்கு ₹1,520 உயர்ந்தது<<>>. இந்நிலையில், இன்று(பிப்.12) ஏறுமுகத்திலேயே தொடர்கிறது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ் $44 டாலர்கள் உயர்ந்து $5,060-ஐ கடந்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால் இன்றும் தங்கம் விலை உயர வாய்ப்புள்ளது.


