News December 15, 2025
வந்தே பாரத் ரயில் மீது கல்வீசி தாக்குதல் – பயணிகள் காயம்

சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலி செல்லும் வந்தே பாரத் ரயில் விருத்தாச்சலம் கடந்து வந்துகொண்டிருந்தபோது, சிறுவர்கள் ரயிலில் கல்லைக் கொண்டு எறிந்ததில், கண்ணாடி நொறுங்கி பயணிகள் சிலர் காயமடைந்தனர்.
இதனையடுத்து திருச்சி ரயில் நிலையம் வந்தே பாரத் ரயிலில் காயம் அடைந்த பயணிகளிடம், முதுநிலை மருத்துவ கண்காணிப்பாளர் விஜயலட்சுமி நேரில் சந்தித்து அவர்களது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.
Similar News
News December 18, 2025
திருச்சி: வீட்டு உரிமையாளர்களே உஷார்!

திருச்சி மக்களே, வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் கையெழுத்திட்ட 60 நாட்களுக்குள் கட்டாயம் ஆன்லைனில் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்பட வேண்டும். இதை செய்ய தவறினால், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இதுபோல வீட்டின் உரிமையாளர்கள் 2 மாத வாடகைக்கு மேல் அட்வான்ஸ் தொகை பெறக்கூடாது. ஷேர் பண்ணுங்க!
News December 18, 2025
திருச்சி: புத்தக பதிப்பாளர்களுக்கு அழைப்பு

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் அமைய உள்ள காமராஜர் நூலகத்திற்கு புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களிடமிருந்து நூல்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பத்தை நூலகத் துறையின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, வரும் 26-ம் தேதிக்குள் அதே இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என பொது நூலக இயக்குனர் ஜெயந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
News December 18, 2025
திருச்சி: சிறப்பு குறைதீர் முகாம் அறிவிப்பு

திருச்சி மண்டல அளவிலான தபால் சேவை குறைதீர் முகாம், திருச்சி தலைமை தபால் நிலையத்தில் வரும் ஜன.8-ம் தேதி நடைபெற உள்ளது. பொதுமக்கள் தங்களது குறைகளை பிரதீப்குமார், உதவி இயக்குனர் (காப்பீடு மற்றும் புகார்), அஞ்சல்துறை தலைவர் அலுவலகம், மத்திய மண்டலம், திருச்சி -01 என்ற முகவரிக்கு வரும் 30 ஆம் தேதிக்குள் தபால் மூலம் அனுப்ப வேண்டும் என மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர் நிர்மலா தேவி தெரிவித்துள்ளார்.


