News December 15, 2025
வந்தே பாரத் ரயில் மீது கல்வீசி தாக்குதல் – பயணிகள் காயம்

சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலி செல்லும் வந்தே பாரத் ரயில் விருத்தாச்சலம் கடந்து வந்துகொண்டிருந்தபோது, சிறுவர்கள் ரயிலில் கல்லைக் கொண்டு எறிந்ததில், கண்ணாடி நொறுங்கி பயணிகள் சிலர் காயமடைந்தனர்.
இதனையடுத்து திருச்சி ரயில் நிலையம் வந்தே பாரத் ரயிலில் காயம் அடைந்த பயணிகளிடம், முதுநிலை மருத்துவ கண்காணிப்பாளர் விஜயலட்சுமி நேரில் சந்தித்து அவர்களது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.
Similar News
News December 28, 2025
திருச்சி: மாணவர்களுக்கு போதை பொருள் விற்பனை

திருச்சி செந்தண்ணீர்புரம் பகுதியில் மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்கப்படுவதாக பொன்மலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நேற்று முன்தினம் அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த நசுருதீன் (24), அசார் முகமது (26), ரவுடி உதுமான் அலி (23) ஆகியோரை பிடித்து சோதனை செய்ததில், அவர்களிடம் போதை மாத்திரைகள் இருந்துள்ளது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
News December 28, 2025
திருச்சி மக்கள் கவனத்திற்கு.. முக்கிய அறிவிப்பு!

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவில் வைகுண்ட ஏகாதேசி சொர்க்கவாசல் திறப்பு விழா வரும் 30-ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, டிச.29-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை போக்குவரத்து சேவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில், ஸ்ரீரங்கம் வழியாக சரக்கு வாகனங்கள் செல்ல அனுமதியில்லை என்றும், மேலும் புறநகர் பேருந்துகள் அனைத்தும் ஓடத்துறை, ஓயாமரி வழியாகச் செல்ல வேண்டும் என திருச்சி போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார்.
News December 28, 2025
திருச்சி: அதிவேகமாக வந்த வாகனம் மோதி ஒருவர் பலி!

இனாம்குளத்தூர் அடுத்த மேல அம்மாபேட்டையை சேர்ந்தவர் மாணிக்கம் (55). கூலி தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் மணப்பாறைக்கு வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்தார். திருச்சி- திண்டுக்கல் சாலையை கடக்க முயன்றபோது திருச்சி நோக்கி வேகமாக வந்த வாகனம் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மாணிக்கம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து இனாம்குளத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


