News September 8, 2024

வந்தவாசி அருகே 2 பேர் பலி

image

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், வெண்குன்றம் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆகாஷ் மற்றும் விஜயன் ஆகிய 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சிவா என்பவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News

News August 9, 2025

தி.மலை: கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் வேலை

image

தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில் காலியாக உள்ள 2,500 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மாதம் ரூ.23,640 முதல் ரூ.96,395 வரை சம்பளம் வழங்கப்படும். டிகிரி முடித்த 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் வரும் ஆக.29ஆம் தேதிக்குள் <>இந்த இணையத்தளத்தில்<<>> விண்ணப்பிக்கலாம். எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு நடைபெறும். சூப்பர் வாய்ப்பு, டிகிரி முடித்த நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க.

News August 9, 2025

தி.மலையில் இன்று கனமழை வெளுக்கும்

image

தி.மலை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய கனமழை வெளுத்து வாங்கியது. இன்று (ஆக.09) தி.மலை மாவட்டத்தில் கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே முன்னெச்சரிக்கையா இருங்க மக்களே!. மற்றவர்களுக்கும் ஷேர் செய்து மழை நிலவரம் பற்றி தெரியப்படுத்துங்கள்.

News August 9, 2025

தி.மலை ஆட்சியர் கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டார்

image

தி.லை மாவட்ட ஆட்சித் தலைவர் க.தர்ப்பகராஜ் தலைமையில் (ஆகஸ்ட்-08) நேற்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற திருவண்ணாமலை மாவட்ட வங்கியாளர்களுடன் ஆலோசனைக் குழு கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தின் நடப்பு நிதி ஆண்டிற்கான 2025 – 2026 வருடாந்திர கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டார். இந்நிகழ்வில் அரசு அலுவலர்கள் துறையை சார்ந்த அரசு அதிகாரிகள் வங்கி மேலாளர்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!