News October 23, 2024

வத்திராயிருப்பு அருகே டிரைவர், கண்டக்டர் மீது தாக்குதல்

image

வத்திராயிருப்பு அருகே கூமாபட்டியில் இருந்து மதுரைக்கு சென்ற தனியார் பஸ்சில் பெரியகருப்பன் என்பவர் ஏறி படியில் நின்று கொண்டு இடையூறு செய்ததை கண்டக்டர் ரஞ்சித்குமார் கண்டித்துள்ளார். இதனையடுத்து, முத்துக்குமார், பெரியகருப்பன், சிவா உள்ளிட்ட சிலர் பஸ்சிற்குள் ஏறி கண்டக்டர் மற்றும் டிரைவரை தாக்கியுள்ளனர். இதுகுறித்து வத்திராயிருப்பு போலீசார் 3 பேர் மீது வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர்.

Similar News

News February 24, 2026

JUST IN விருதுநகரில் 98 வாக்குச்சாவடிகள் அதிகரிப்பு

image

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் 1,200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகள் பிரித்து புதிய வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன்படி, 1901 ஆக இருந்த வாக்குச்சாவடிகள் தற்போது 98 வாக்குச்சாவடிகள் அதிகரித்து மொத்தம் 1999 வாக்குச்சாவடிகளாக உயர்ந்துள்ளது. அதில் 88 வாக்குச்சாவடி மையங்கள் ஏற்கனவே உள்ள அமைவிடத்திலும், 10 வாக்குச்சாவடிகள் புதிய அமைவிடங்களிலும் உள்ளன.

News February 24, 2026

விருதுநகர்: கேஸ் மானியம் ரூ.300 வங்கி கணக்கில் பெறுவது எப்படி…?

image

விருதுநகர் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு <>இங்கு க்ளிக் <<>>செய்து எந்த நிறுவனம் (Bharatgas, indane, HP) என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், IFSC கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் போதும், மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் வந்துவிடும். இதை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News February 24, 2026

சிவகாசி: பட்டாசு தொழிலாளியிடம் ரூ. 3¾ லட்சம் மோசடி

image

சிவகாசி கொங்கலாபுரத்தை சேர்ந்தவர் தர்மராஜ். இவர் திருவேங்கடத்தை சேர்ந்த பட்டாசு தொழிலாளியான காளீஸ்வரியின் (50) மகளுக்கு அரசு மருத்துவமனையில் நர்சிங் வேலை, மருமகனுக்கு ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வேலை வாங்கித்தருவதாக ரூ.2.90 லட்சம், காளீஸ்வரியின் உறவினர் சின்னத்துரையிடம் ரூ.98,000 பெற்று மோசடி செய்துள்ளார். இதுகுறித்த புகாரில் தர்மராஜ், பத்மப்ரியா மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!