News December 25, 2025
வத்தலகுண்டு: நட்பாக பழகி மோசடி இளம் பெண் கைது!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்த முருகவேல்–செல்வி தம்பதியினருக்கு, மதுரை திருநகரைச் சேர்ந்த ஆரோக்கியமேரி என்பவர் ஒரு கோயிலில் அறிமுகமாகியுள்ளார். பின்னர் அவர்களின் வீட்டுச் சாவியைத் திருடி 15½ பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளார். இது குறித்து முருகவேல் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் ஆரோக்கியமேரயை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Similar News
News December 29, 2025
குஜிலியம்பாறை: கைவரிசை காட்டிய நண்பர்கள்!

திண்டுக்கல் குஜிலியம்பாறையைச் சேர்ந்த கருப்பசாமி, திருச்செந்தூர் கோயிலுக்குச் சென்றபோது அவரது கார் திருடப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், கருப்பசாமியின் வீட்டின் அருகே வசிக்கும் செந்தில்குமார் மற்றும் அவரது நண்பர் இருளப்பசாமி ஆகியோரே காரைத் திருடியது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், காரை மீட்டனர்.
News December 29, 2025
திண்டுக்கல்: இலவச கேஸ் சிலிண்டர் விண்ணப்பிப்பது எப்படி?

1.இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற <
2.பெயர்,மொபைல் எண் விவரங்களை உள்ளிட்டு ‘Register ‘ செய்ய வேண்டும்
3.ஆன்லைன் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணபத்தை அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் ஒப்படைக்க வேண்டும்
4.மேலும் விவரங்களுக்கு 1800-233-3555,1800-266-6696 அழைக்கவும்.ஷேர் பண்ணுங்க
News December 29, 2025
பழனியில் வசமாக சிக்கிய இருவர் கைது!

பழனி திண்டுக்கல் சாலையில் உள்ள ஐஸ்வர்யா மருத்துவமனை அருகே கஞ்சா விற்ற கவாஸ்கர் (36) மற்றும் பேருந்து நிலையம் அருகே கஞ்சா விற்ற ரவீந்திரன் (26) ஆகிய இருவரை பழனி நகர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


