News November 23, 2025

வண்டலூர் பூங்காவில் சிங்கம் உயிரிழப்பு

image

வண்டலூர்: அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த புவனா என்ற 20 வயது பெண் சிங்கம் உடல்நலக்குறைவு, வயதுமூப்பு காரணமாக பல உறுப்புகள் செயலிழந்ததால் உயிரிழந்தது. பூங்காவில் மொத்தம் 7 சிங்கங்கள் பராமரிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த சிங்கம் உயிரிழந்துள்ளது.

Similar News

News January 27, 2026

சென்னை: பிறப்பு-இறப்பு சான்று வேண்டுமா? Hi சொல்லுங்க

image

சென்னை மக்களே, இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை SHARE பண்ணுங்க.

News January 27, 2026

சென்னையில் த.வெ.க நிர்வாகி திடீர் மரணம்

image

திருவொற்றியூர் தொகுதிக்குட்பட்ட தமிழக வெற்றிக் கழக பத்தாவது வார்டு செயலாளர் ராமு தீவிரமாக கட்சி பணி ஆற்றி வந்தவர். இந்நிலையில், திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. உறவினர்கள் அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்து உள்ளார். டாக்டர்கள் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறியுள்ளனர். இதனை அறிந்த தவெக நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News January 27, 2026

சென்னையில் மின் தடை; உங்க ஏரியா இருக்கா?

image

சென்னையில் 27.01.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அடையார், கேனால் பேங்க் சாலை, கேன்சர் மருத்துவமனை, காந்தி நகர், கேனால் கிராஸ் சாலை, விவேக்ஸ் ஷோரூம், கிரசென்ட் அவென்யூ, காமராஜ் கல்லூரி, பம்பிங் ஸ்டேஷன்,மலர் மருத்துவமனை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும்.

error: Content is protected !!