News July 26, 2024

வண்டலூர் பூங்காவிற்கு வந்த வால்பாறை புலி

image

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் 2021ஆம் ஆண்டு முள்ளம்பன்றியை வேட்டையாட முயன்ற 1 வயது புலி காயமடைந்தது. இதை வனத்துறையினர் மீட்டு 3 ஆண்டுகளாக பராமரித்து வந்தனர். இந்நிலையில், இந்த புலியை வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, தற்போது வண்டலூருக்கு வந்த புலி, இங்குள்ள தட்பவெப்பநிலைக்கு ஏற்ப மாறிய பின்னர் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படும்.

Similar News

News March 3, 2026

செங்கல்பட்டு இரவு பணி செய்யும் காவலர் விவரம்

image

செங்கல்பட்டு இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 2, 2026

செங்கல்பட்டு காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

image

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறையினர் மக்களுக்கு சைபர் கிரைம் மோசடியை தவிர்க்க சில அறிவுரைகளை வழங்கியுள்ளனர். அதில் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் தங்களது ஆன்லைன் காண பரிவர்த்தனைகளில் உள்ள கடவுச்சொல் (UPI PIN) – யை அடிக்கடி மாற்றியமைப்பதன் மூலமாக சைபர் மோசடியை தவிர்க்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 2, 2026

செங்கல்பட்டு: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

image

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!