News November 24, 2025
வண்டலூர்: காதலியை தொல்லை செய்த வாலிபர் கைது!

வண்டலூர்: திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது பெண் கல்லூரியில் படிக்கும் போது சக நண்பரை காதலித்துள்ளார். இந்நிலையில், அப்பெண்ணிற்கு சென்னையில் வேலை கிடைத்ததும், காதலை முறித்துக்கொண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர், காதலிக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோ, புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார். இதுகுறித்த புகாரில் ஆஸ்கர்(22) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News November 24, 2025
காஞ்சி: மனைவியை துடிதுடிக்க, கழுத்தறுத்து கொலை!

காஞ்சி: படப்பையில் உள்ள ஆதனஜ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் கங்காதரன்(36). இவருடைய மனைவி நந்தினி(29). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், மனைவியின் நடத்தையில் சந்தேகித்த கங்காதரன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால், நந்தினி தனது பெரியம்மா வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சென்று தகராறு செய்த கங்காதரன், அவரை கழுத்தை அறுத்து கொலை செய்தார். இவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
News November 24, 2025
காஞ்சி: கலப்பு திருமணத்திற்கு ரூ.20,000!

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., கலப்பு திருமணம் செய்திருந்தால் அவர்களுக்கு அரசின் சார்பாக உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதாவது. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்பவருக்கு ரூ.20,000, BC,MBC வகுப்பை சேர்ந்தவரை திருமணம் செய்பவருக்கு ரூ.10,000 உதவித்தொகையும் வழங்கப்படும். இதற்கு திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகளுக்குள் மாவட்ட சமூக நல அலுவல்கத்தில் விண்ணப்பிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE!
News November 24, 2025
காஞ்சி: 10ஆவது படித்தால் உளவுத்துறை வேலை!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காலியாக உள்ள 362 ‘Multi Tasking staff; பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு மாதம் ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. டிச.14ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <


