News November 7, 2025
வணிக அரசியல் நடத்தும் திமுக: அன்புமணி

அரசியல் பொதுக்கூட்டங்களுக்கு ₹20 லட்சம் வரை வைப்புத்தொகை செலுத்தும் வகையில் விதிகள் வகுப்பது ஏற்புடையதல்ல என்று அன்புமணி தெரிவித்துள்ளார். திமுக வணிக அரசியல் செய்வதாகவும், அதை போன்ற கட்சிகள் மட்டுமே பொதுக்கூட்டங்கள் நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இப்படி யோசனை கூறுவதாக அவர் சாடியுள்ளார். சேதத்திற்கு அபராதம் வசூலிக்க சட்டத்தில் இடம் உள்ளதால், வைப்புத்தொகை முன்மொழிவை கைவிடுமாறு வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News February 2, 2026
இன்றைய நல்ல நேரம்

▶பிப்ரவரி 2, தை 19 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 6:30 AM – 7:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶குளிகை: 1:30 PM – 3:00 PM ▶திதி: பிரதமை ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்
News February 2, 2026
TN அரசில் 709 வேலைவாய்ப்பு.. உடனே முந்துங்க

மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலகங்கள், பஞ்சாயத்து ஒன்றியங்கள் மற்றும் வட்டார அலுவலகங்களில் மொத்தம் 709 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுத்துள்ளது. ஆபிஸ் அசிஸ்டண்ட், டிரைவர், நைட் வாட்ச்மேன் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி போதுமானது. சம்பளமாக ₹15,700 வழங்கப்படும். ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும்.
News February 2, 2026
அத்திப்பழத்தின் அற்புதமான நன்மைகள்!

அத்திப்பழத்தில் கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் கே மற்றும் பி காம்ப்ளக்ஸ் ஆகியவை நிறைந்துள்ளன. நன்மைகள்: *உடலில் செரிமான அமைப்பு பலப்படுவதால் மலச்சிக்கல், வாயு தொல்லை ஏற்படாது * நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை தந்து எடை இழப்புக்கு உதவுகிறது *ரத்த சோகைக்கு தீர்வு *ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் நிறைந்திருப்பதால் சருமத்திற்கும் நல்லது


