News October 28, 2024
வணிகர் சங்க நிர்வாகி மறைவு: வியாபாரிகள் இரங்கல்

சுரண்டை வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கேடிகே காமராஜ், ஏடி நடராஜன், தனபால் உள்ளிட்ட நிர்வாகிகள் விடுத்துள்ள அறிக்கையில், வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பின் முக்கிய நிர்வாகியும், நெல்லை மண்டல தலைவருமான எம்.ஆர்.எஸ்.சுப்பிரமணியன் உடல் நலக்குறைவால் இயற்கை எய்திய செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. வணிகர்களுக்கு அவர் செய்த பணி அளப்பரியது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் என தெரிவித்துள்ளனர்.
Similar News
News May 8, 2025
தென்காசி கலை கல்லூரியில் விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு

தென்காசி மாவட்டத்தில் உள்ள 4 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025 – 2026 கல்வியாண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கு www.tngasa.in இணையதளத்தில் 07.05.2025 முதல் 27.05.2025 வரை விண்ணப்பிக்கலாம். இணையதளம் வழியாக விண்ணப்பிக்க இயலாதவர்கள் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் (AFC) மூலம் விண்ணப்பிக்கலாம்.என மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று (மே.08) அழைப்பு விடுத்துள்ளார் .
News May 8, 2025
தென்காசியில் அரசு செவிலியர் வேலை சம்பளம் ரூ,23,000.

தென்காசியில் அரசு வேலை வேண்டுமா? அப்போ இது உங்களுக்கானது தென்காசியில் Staff Nurse, Pharmacist, ANM மொத்தமாக அரசு 11 பணியிடங்கள் உள்ளன.B.Pharm, B.Sc, BA, D.Pharm, Diploma, ITI, M.Sc, MA, Nursing தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.ரூ.14,000 முதல் ரூ.23,000 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.<
News May 7, 2025
தென்காசி மாவட்ட ரோந்து பணி காவலர்கள்

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல்துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று 01.05.2025 தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம். அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்-9884042100 ஐ தொடர்புகொள்ளலாம்.