News June 16, 2024

வணிகர்கள் விழிப்புணர்வு கூட்டம்

image

இராமநாதபுரம் வண்டிக்கார தெருவில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் வணிகர்கள் விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடந்தது. மதுரை மண்டல இணை ஆணையர் ஸ்ரீதேவி தலைமை வகித்தார். இராமநாதபுரம் வருமான அதிகாரி சந்திரசேகர், ஆலோசகர் ஆடிட்டர் திருப்பதி, இராமநாதபுரம் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன் முன்னிலை வகித்தனர். நாட்டின் பொருளதார வளர்ச்சிக்கு அனைவரும் வருமானவரி செலுத்த வேண்டும் என்று மண்டல இணை ஆணையர் தெரிவித்தார்.

Similar News

News March 1, 2026

ராமநாதபுரம்: வீட்ல கரண்ட் இல்லையா.?

image

ராமநாதபுரம் மக்களே, இந்த மழை நேரத்தில் வீட்டில் கரண்ட் இல்லையா? வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ்-க்கு அலைய வேண்டியதில்லை. வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 94458 50811, 94431 11912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணி உதவுங்க.

News March 1, 2026

கச்சத்தீவு எங்களுக்கே சொந்தம் – இலங்கை அமைச்சர் பேட்டி

image

கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமான பகுதி இது சர்வதேச பிரச்சனை என்பதால் வேறு ஏதும் கருத்து சொல்ல முடியாது என அந்நாட்டு மீன்வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். இந்திய மீனவர்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளில் இழுவை படகில் எல்லை தாண்டி மீன்பிடிக்க செல்கின்றனர். மேலும் இலங்கை மீனவர்களின் வலைகளை சேதப்படுத்தி மீன்களை அள்ளி செல்கின்றனர். எனவே இலங்கை மீனவர்கள் பாதிக்கின்றனர் என்றார்.

News March 1, 2026

இராம்நாடு: ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன்

image

லக்பதி திதி யோஜனா திட்டத்தின் கீழ் பெண்கள் தொழில் தொடங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. இதற்கு மகளிர் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக இருக்கும் 18 -50 வயதுக்குட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். ஆதார், பான் கார்டு, வருமான சான்று, சுய உதவிக்குழு உறுப்பினர் சான்றிதழுடன் அருகிலுள்ள சுய உதவிக்குழு அலுவலங்கள் (அ) <>இணையதளத்தில்<<>> விண்ணப்பிக்கலாம்.

error: Content is protected !!