News December 7, 2025
வட மாவட்டங்களில் திமுகவின் மாஸ்டர் மூவ்!

விழுப்புரம், கடலூர், அரியலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் பாமகவின் வாக்குகளை குறிவைத்து திமுக காய் நகர்த்தி வருகிறது. வன்னியர்களுக்கு திமுகவில் முக்கியத்துவம் இல்லை என பேசி வரும் அன்புமணியின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில், அந்த சமூகத்தை சேர்ந்த அமைச்சர் சிவசங்கர், லட்சுமணன் உள்ளிட்டோருக்கு மா.செ., பதவி வழங்கியதன் மூலம் கணிசமாக வாக்குகள் கிடைக்கும் என தலைமை நம்புகிறதாம்.
Similar News
News April 3, 2026
வளைகுடா நாடுகளில் தினமும் 20 இந்தியர்கள் உயிரிழப்பு

2021-25 காலக்கட்டத்தில் வெளிநாடுகளில் 37,740 இந்திய ஊழியர்கள் இறந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில், 85%-க்கும் அதிகமானோர் வளைகுடா நாடுகளில் தொழிலாளர்களாக பணிபுரிந்தவர்கள் என்றும், சராசரியாக தினமும் 20 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக மத்திய அரசு கூறியுள்ளது. மேலும், இந்திய தொழிலாளர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து தூதரக & சட்ட உதவிகள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 3, 2026
என்னை கத்தி கத்தி சாக விடாதீர்கள்: சீமான்

வரும் சட்டப்பேரவை தேர்தலில் உருப்படியான ஒரு முடிவை மக்கள் எடுக்க வேண்டும் என சீமான் கேட்டுக் கொண்டுள்ளார். தனக்கு சாப்பாட்டில் விஷம் வைத்து கொன்று நிம்மதியாக சாகவிடுங்கள் அல்லது தன்னிடம் தமிழகத்தை கொடுத்து வாய்ப்பளியுங்கள் என சீமான் கூறினார். மேலும் 15 ஆண்டுகளாக மக்களுக்காக கத்திவிட்டேன்; என் பாவமே உங்களை சும்மா விடாது என்றும் அவர் தெரிவித்தார். <<-se>>#TNElection2026<<>>
News April 3, 2026
பூத் ஏஜெண்ட் ஆக இருப்பேன்: அண்ணாமலை

சட்டப்பேரவை தேர்தலில் அண்ணாமலை போட்டியிடுவாரா இல்லையா என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. இந்நிலையில், ஓட்டுப்பதிவு(ஏப்.23 ) நாளன்று முதல் ஆளாக வாக்கு செலுத்திவிட்டு, அதன்பிறகு ஏதேனும் ஒரு வாக்குச்சாவடியில் பாஜக பூத் ஏஜெண்ட் ஆக பணியாற்றுவேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது அவர் தேர்தலில் போட்டியிடவில்லை என்பதற்கான சமிக்ஞை என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். <<-se>>#TNElection2026<<>>


