News June 19, 2024
வட கொரியா சென்றார் ரஷ்ய அதிபர் புடின்

ரஷ்ய அதிபர் புடின், 24 ஆண்டுகளுக்குப் பின் வட கொரியா சென்று அதிபர் கிம் ஜாங் உன்-ஐ சந்தித்தார். உக்ரைனுக்கு எதிரான போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவுக்கு ஆயுதங்கள் அதிகம் தேவைப்படுகிறது. அதற்காக அவர்கள் வட கொரியாவை நாடுவதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். இருநாட்டு உறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தவுள்ளதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 7, 2026
PM KISSAN அடுத்த தவணை எப்போது?

PM KISSAN திட்டத்தின் அடுத்த தவணை ₹2,000 வரவு வைப்பதற்கான பணிகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, தகுதியுள்ள விவசாயிகளை கண்டறிய விவசாயிகள் பதிவு எண் என்ற நடைமுறை நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. முக்கியமாக தமிழகத்தில் தேர்தல் முடிந்தவுடன் விவசாயிகளுக்கும் இந்த ‘விவசாயி பதிவு’ மற்றும் தரவுச் சரிபார்ப்பு குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என தெரிகிறது.
News April 7, 2026
பாகிஸ்தான் துண்டு துண்டாகிவிடும்: ராஜ்நாத் சிங்

இந்தியாவுடன் போர் மூண்டால், கொல்கத்தாவை தாக்குவோம் என பாக்., அமைச்சர் குவாஜா பேசியதற்கு ராஜ்நாத் சிங் எச்சரித்துள்ளார். பாக்., இதுபோன்ற ஆத்திரமூட்டும் கருத்துக்களை சொல்லக்கூடாது என அவர் கூறியுள்ளார். 55 ஆண்டுகளுக்கு முன்பு பாக்., 2-ஆக பிரிக்கப்பட்டதை நினைவுப்படுத்திய அவர், தற்போது பெங்கால் மீது கைவைத்தால் பாக்., எத்தனை துண்டுகளாகும் என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும் எனவும் பேசியுள்ளார்.
News April 7, 2026
தமிழக தேர்தலுக்கு ₹1,302 கோடி ஒதுக்கீடு

தமிழக சட்டப்பேரவை தேர்தலை நடத்துவதற்காக ₹1,302 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். இந்த தொகையானது 2021 சட்ட தேர்தலுக்கு ஒதுக்கப்பட்டதை விட ₹507 கோடி அதிகமாகும். தமிழகத்தில் 5,938 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக ஏப்.13-ம் தேதி துணை ராணுவப் படையினர் கூடுதலாக வரவுள்ளதாகவும் அவர் கூறினார். <<-se>>#TNElection2026<<>>


