News March 9, 2026

வடவள்ளியில் எழுந்த சர்ச்சை! அண்ணாமலை குற்றச்சாட்டு

image

வடவள்ளி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை வடவள்ளி பகுதி திமுக பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ஷ்யாம் சுந்தர் என்ற நபர் தனது வீடாக மாற்றி குடும்பத்துடன் வசித்து வருகிறார் என்ற செய்தி திமுகவின் அதிகார துஷ்பிரயோகத்தின் உச்சத்தை காட்டுகிறது. அவர் மீது கடும் நடவடிக்கை எடுத்து சுகாதார நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர பாஜக முன்னாள் மாநிலதலைவர் அண்ணாமலை அரசை வலியுறுத்தியுள்ளார்.

Similar News

News March 12, 2026

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (11.03.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 11, 2026

கோவை சம்பவம்: அன்புமணி கண்டனம்

image

கோவை அரசு பள்ளி சத்துணவில் பல்லி விழுந்து 44 மாணவர்கள் மயக்கமடைந்த சம்பவத்திற்குப் பாமக தலைவர் அன்புமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “திமுக அரசு வழங்குவது சத்துணவா அல்லது விஷ உணவா?” என தனது ‘X’ தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். மாணவர்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினாலும், அசம்பாவிதம் நேர்ந்திருந்தால் என்னவாகியிருக்கும் என நினைக்கவே நெஞ்சம் பதறுவதாக அவர் வேதனையை பகிர்ந்துள்ளார்.

News March 11, 2026

கோவை: உங்க பெயரில் நிலம் இருக்கா? உடனே செக் பண்ணுங்க!

image

கோவை மக்களே நில உரிமையாளர்கள் சிட்டா, புலப்படம் (FMB) மற்றும் அடங்கல் ஆகியவற்றைத் தனித்தனியாகப் பதிவிறக்கம் செய்வதற்குப் பதிலாக, இனி <>https://eservices.tn.gov.in <<>>என்ற இணையதளத்தில் ஒருங்கிணைந்த நில ஆவணமாகப் பெற்றுக்கொள்ளலாம்; இதற்காக மாவட்டம், வட்டம் மற்றும் புல எண் விவரங்களை உள்ளீடு செய்து, வங்கி மற்றும் அரசுத் தேவைகளுக்கான ஆவணங்களை எளிதாகப் பதிவிறக்கம் செய்யலாம். இந்த நல்ல தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!