News December 31, 2025

வடமாநில இளைஞர் உயிரிழப்பா? Fact Check

image

திருத்தணி சம்பவத்திற்கு கண்டனங்கள் வலுத்துள்ள நிலையில், தாக்குதலுக்கு ஆளான வடமாநில இளைஞர் உயிரிழந்துவிட்டதாக SM-ல் தகவல் பரவியது. ஆனால் அது உண்மையல்ல என்றும் அவர் சொந்த ஊர் திரும்பிவிட்டதாகவும் வடக்கு மண்டல ஜ.ஜி கூறியுள்ளார். இதனிடையே அந்த இளைஞர் கை, தலையில் கட்டுகளுடன் உள்ள வீடியோ வைரலாகியுள்ளது. வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தில், இப்படி ஒரு சம்பவம் நடந்தது மிகவும் வேதனைக்குரிய விஷயமாகும்.

Similar News

News January 22, 2026

பாடகி ஜானகியின் மகன் காலமானார்.. கண்ணீர் அஞ்சலி

image

தாய் இருக்கும்போதே மகன் இறப்பது பெரும் சோகம். தனது ஒரே மகனை பறிகொடுத்துவிட்டு பாடகி ஜானகி கண்ணீரில் மூழ்கியுள்ளார். நடிகரும், நடன கலைஞருமான <<18924063>>முரளி கிருஷ்ணாவின் மறைவுக்கு<<>> பாடகி சித்ரா உள்ளிட்ட திரை பிரபலங்கள் உருக்கமாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மைசூரில் நடைபெற்றுவரும் அவரது இறுதிச் சடங்கில், கலந்து கொண்டு ஜானகிக்கு திரைப்பிரபலங்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். RIP

News January 22, 2026

நடிகை மியா கலிஃபா டேட்டிங்.. CLARITY (PHOTO)

image

பிரபல நடிகை மியா கலிஃபா, தான் Mr.பீன் உடன் டேட்டிங் செய்யவில்லை என விளக்கம் அளித்துள்ளார். பிரபல மாடல் மற்றும் நடிகையான மியா கலிஃபா, ஹாலிவுட் நடிகரான ரோவன் அட்கின்சனுடன் டேட்டிங்கில் இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அதை மறுத்துள்ள மியா, ‘I’m dating an idiot; But it’s not Mr.Bean’ என தனது X பதிவில் தெரிவித்துள்ளார். 71 வயதான Mr.பீன் லூயிஸ் ஃபோர்டு என்பவருடன் டேட் செய்து வருகிறார்.

News January 22, 2026

தவெகவுக்கு முதல் வெற்றி: விஜய் வெளியிட்டார்

image

நாடு காப்பவர்களின் சின்னம் <<18924405>>’விசில்’<<>> என விஜய் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சின்னம் தொடர்பாகத் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மக்களின் பாதுகாவலர்களின் கையில் இருக்கும் விசில் தவெகவுக்கு கிடைத்தது முதல் வெற்றி அத்தியாயம் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஒரே சின்னம் விசில் எனவும், வரும் தேர்தலில் தவெக மகத்தான வெற்றி பெறுவது உறுதி என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!