News September 12, 2025
வடபழனி முருகன் கோயிலில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை

சென்னை வடபழனி முருகன் கோவிலில் ஓதுவார், தமிழ் மற்றும் இசை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளது. தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாதம் ரூ.25,000 சம்பளம் வழங்கப்படும். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலின் பணியிடங்களுக்கு <
Similar News
News September 12, 2025
தூய்மை பணியாளர்கள் மயக்கம்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சென்னை புறநகர் பகுதிகளில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில் இன்று சென்னை காமராஜர் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட பொழுது 2 தூய்மை பணியாளர்கள், உணவுகளை உட்கொள்ளாமல் போராட்டத்தில் ஈடுபட்டதால் மயக்கம் அடைந்து சம்பவ இடத்திலேயே விழுந்தனர். இதனையடுத்து அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர்.
News September 12, 2025
சென்னை கலெக்டர் முக்கிய அறிவிப்பு

சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் மருத்துவம் சார்ந்த சான்றிதழ் பாடப்பிரிவுகளில் பயில விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவிப்பு வெளியிட்டுள்ளார். விண்ணப்பப் படிவங்கள் ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் உள்ள அலுவலகத்தில் கட்டணமின்றி வழங்கப்படும் எனவும், உரிய முறையில் நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள் 12-ம் தேதி அல்லது அதற்கு முன்னர் சமர்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News September 12, 2025
சென்னை: கேன் தண்ணீர் பயன்படுத்துவர்கள் கவனத்திற்கு

சென்னை மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. ஷேர் பண்ணுங்க.