News November 27, 2024
வடதமிழகத்தை நோக்கி நகரும் தாழ்வு மண்டலம்

வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. புயலாக மாற இன்னும் 12 மணி நேரம் ஆகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் மணிக்கு 3 கிலோ மீட்டர் வேகத்தில் வடதமிழகத்தை நோக்கி நகருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 500 கிலோ மீட்டர் தொலையில் தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News August 30, 2025
சென்னையில் காவலர் தற்கொலை

சென்னை அருகே இன்று (ஆக.30) தலைமை காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிண்டி மவுண்டு பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்த, மத்திய குற்றப்பிரிவு தலைமை காவலரான சந்திரமோகன் இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு பணி சுமை காரணமாக அல்லது வேறேதும் காரணம் உள்ளதா என போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
News August 30, 2025
சென்னை: கேஸ் சிலிண்டர் இருக்கா? இது கட்டாயம்

சென்னை மக்களே எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் எல்பிஜி (LPG) கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், ஹெச்பிசி போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். வேறு எதேனும் உதவி தேவைப்பட்டால் 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். (கேஸ் சிலிண்டர் வைத்துள்ளோருக்கு SHARE பண்ணுங்க)
News August 30, 2025
சென்னை: மாதம் ரூ.14,000! SUPER வாய்ப்பு

சென்னை போக்குவரத்து கழகத்தில் தொழில் பழகுநர் பயிற்சி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஐடிஐ ( Fitter, Turner, Painter, Welder, Diesel Mechanic, Electrician, Motor Vehicle Mechanic) தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.14,000 வழங்கப்படும். இதற்கு செப்.10ம் தேதி குரோம்பேட்டையில் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பிக்கலாம். (SHARE பண்ணுங்க)