News November 22, 2024
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணி தீவிரம்

சிவகங்கை மாவட்டத்தில் வட கிழக்கு மழை பெய்து வருவதால் கொசு உற்பத்தி மற்றும் காய்ச்சல், தொற்று நோய் தடுப்பதற்கான சுகாதார பணிகள் மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டு வருகிறது. பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ஆட்சியர் ஆஷா அஜித் தகவல் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 15, 2025
காரைக்குடி வந்தார் தமிழக ஆளுநர்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வருகை தந்துள்ளதை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் பொற்கொடி மலர்கொத்து வழங்கி வரவேற்றார்.உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத், தேவகோட்டை சார் ஆட்சியர் ஆயுஷ் வெங்கட் வட்ஸ், அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் மதிப்புறு கர்னல் பேரா. இரவி ஆகியோர் உடனிருந்தனர்
News October 15, 2025
சிவகங்கை: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

சிவகங்கை மக்களே, 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம். <
News October 15, 2025
சிவகங்கை தீயணைப்பு நிலையத்தில் பணம் பறிமுதல்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தீயணைப்பு நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நேற்று ஆய்வு நடத்தினர். அப்போது கணக்கில் வராத ரூ.65,000 லஞ்ச ஒழிப்புத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்குவதில் லஞ்சம் பெறுவதாக மேற்கொண்ட சோதனையில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.