News September 25, 2024
வடகிழக்கு பருவமழை அவசர கால தொடர்பு எண் அறிவிப்பு
நீலகிரி ஆட்சியர் லட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவசர கால தொடர்புஎண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது உதகை கோட்டம் 04232445577, குன்னூர்கோட்டம் 04232206002, கூடலூர் கோட்டம் 04262261295, ஊட்டிவட்டம் 04232442433 குன்னூர்வட்டம் 04232206102 கோத்தகிரிவட்டம் 04266271718 கூடலூர் வட்டம் 04262261252 என்ற எண்களில் தகவல் தெரிவிக்கலாம் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Similar News
News November 20, 2024
நீலகிரி: 346 பேர் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி
நீலகிரி மாவட்டத்தில் நடந்த கலை திருவிழாவில் திறமைகளை வெளிப்படுத்திய 346 மாணவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகியுள்ளனர். 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வர்ணம் தீட்டுதல், திருக்குறள் ஒப்பிவித்தல், நாட்டுப்புற நடனம், பறை இசைத்தல் உள்ளிட்ட 84 வகை போட்டிகள் உள்ளன. வட்டார, மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் வென்ற மாணவர்கள் தற்போது மாநிலப் போட்டிக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.
News November 20, 2024
நீலகிரி பழங்குடியினரை சந்திக்கும் ஜனாதிபதி
வரும் 27ஆம் தேதி கோவை சூலூர் விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஊட்டி ராஜ்பவன் வருகிறார். அன்றைய தினம் ஓய்வு எடுக்கிறார். நவ.28ஆம் தேதி குன்னூர் வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில் நடக்கும் நிகழ்வில் பங்கேற்கிறார். 29ஆம் தேதி ராஜ்பவனில் நீலகிரி பழங்குடியின மக்களை சந்திக்கிறார்.
News November 19, 2024
நீலகிரி தலைப்பு செய்திகள்
1.நீலகிரி மாவட்டத்தில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் 107வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
2.கூட்டுறவு வார விழாவில் அரசு கொறடா பங்கேற்பு
3.நீலகிரியில் வன விலங்கு கணக்கெடுப்பு தொடக்கம்
4.ஊட்டியில் வீடு கட்டி தருவதாக ரூ.1.50 கோடி மோசடி
5. ஜனாதிபதி வருகை முன்னேற்பாடு குறித்து ஆட்சியர் தலைமையில் ஆய்வு கூட்டம்