News December 14, 2025

வங்கி கணக்கில் ₹4,000.. அரசு புதிய அறிவிப்பு

image

பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுக்கு ₹4,000 வழங்கும் PM யாசஸ்வி உதவித் தொகை திட்டத்திற்கான புதுப்பித்தல், புதிய விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நாளை(டிச.15) வரை <>http://scholarships.gov.in<<>> இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டம் மூலம் 9, 11-ம் வகுப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது.

Similar News

News March 2, 2026

பிளாப் ஆனதா TVK செயல்வீரர்கள் கூட்டம்?

image

தேர்தலையொட்டி 234 தொகுதிகளிலும் TVK செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன் உள்ளிட்டோர் பங்கேற்ற தொகுதிகளை தவிர பல தொகுதிகளில் ஆலோசனை நடைபெறவில்லை என கூறப்படுகிறது. சில தொகுதிகளில் விஜய் பட பாடல்களை ஒலிக்கவிட்டு கட்சியினர் ஆடிக்கொண்டிருந்தனராம். கட்சி ரீதியாக 1,100 ஒன்றியங்கள், 5,200 கிளை கழகங்களுக்கு நிர்வாகிகள் நியமிக்காததே இதற்கு காரணமாம்.

News March 2, 2026

தங்கம் விலை தடாலடியாக மாறியது

image

அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் போரின் காரணமாக சர்வதேச சந்தையில் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ் (28g) தங்கம் $141 (இந்திய மதிப்பில் ₹12,842) உயர்ந்து $5,372.60-க்கு விற்பனையாகிறது. அதேபோல வெள்ளியின் விலையும் $3 உயர்ந்து $95.59-க்கு விற்பனையாகிறது. இதே நிலை நீடித்தால் இன்றைய தினம் இந்திய சந்தையிலும் தங்கத்தின் விலை அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.

News March 2, 2026

CM ஸ்டாலினுடைய கலாச்சாரம் இதுதானா? தமிழிசை

image

சுமார் ₹7 ஆயிரம் கோடி மதிப்​பிலான நலத்திட்டங்களை அர்ப்​பணிக்க TN-க்கு வந்த PM மோடியை ஒட்​டுமொத்த TN-ம் உற்​சாகத்​தோடு வரவேற்றது என தமிழிசை கூறியுள்ளார். ஆனால் CM ஸ்டாலின் மட்டும் PM-ஐ வரவேற்க வரவில்லை என்ற அவர், இது என்ன மாதிரியான கலாச்சாரம் என கேள்வி எழுப்பினார். மேலும், TN வளர்ச்சித் திட்​டங்​களை வழங்க வந்த PM-ஐ, முதல்​வர் வரவேற்​காமல் இருப்பது கண்​டிக்​கத்​தக்​கது என அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!