News March 3, 2026

வங்கி கணக்கில் ₹2,000 பணம்.. வந்தாச்சு HAPPY NEWS

image

PM KISAN திட்டத்தின் 22-வது தவணைத் தொகை (₹2,000) எப்போது கிடைக்கும் என்ற விவசாயிகளின் கேள்விக்கு விடை கிடைத்துள்ளது. மார்ச் 14-க்குள் டெபாசிட் செய்ய முடிவு செய்திருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இம்முறை KYC அப்டேட் செய்யாதது உள்ளிட்ட காரணங்களால் பலருக்கும் பணம் கிடைக்காது எனக் கூறப்படுகிறது. pmkisan.gov.in இணையதளத்தில் Know Your Status மூலம் உங்களுக்கு பணம் வருமா என்பதை அறியலாம்.

Similar News

News April 9, 2026

தமிழக அரசை முடிவு செய்யும் முதல் முறை வாக்காளர்கள்!

image

தமிழகத்தில் 18-19 வயதுடைய முதல்முறை வாக்காளர்கள் எண்ணிக்கை 34% உயர்ந்துள்ளதாக ECI தெரிவித்துள்ளது. 2024 லோக்சபா தேர்தலில் 10.9 லட்சமாக இருந்த இவர்களின் எண்ணிக்கை, தற்போது 14.6 லட்சமாக உயர்ந்துள்ளது. மொத்த வாக்காளர்களில் 2024-ல் 1.8% ஆக இருந்த முதல் தலைமுறை வாக்காளர்கள், தற்போது 2.5% ஆக உள்ளனர். இவர்களும் அடுத்த ஆட்சியை தீர்மானிக்கக்கூடிய முக்கிய சக்தியாக உள்ளனர்.

News April 9, 2026

FLASH: தங்கம் விலை சவரனுக்கு ₹1,600 குறைந்தது!

image

தங்கம் விலை நேற்று சவரனுக்கு ₹2,720 அதிகரித்த நிலையில், இன்று(ஏப்.9) அதில் பாதியாக சவரனுக்கு ₹1,600 குறைந்துள்ளது. இதனால், சென்னையில் 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹200 குறைந்து ₹14,000-க்கும், சவரன் ₹1,12,000-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் நேற்று 4% வரை உயர்ந்த தங்கம், இன்று மீண்டும் இறங்குமுகத்தில் இருப்பதால் நம்மூர் சந்தையில் பெரிய அளவில் குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

News April 9, 2026

அண்ணாமலை அப்செட் ஆகல.. நிதின் நபின்

image

அண்ணாமலைக்கு சீட் வழங்கப்படாதது குறித்து அவரே விளக்கமளித்தும் ஓயாத விவகாரமாக தொடர்கிறது. இந்நிலையில், சீட் கொடுக்காததால் அண்ணாமலைக்கு எந்த வருத்தமும் இல்லை, அவர் தற்போது பிரசாரத்தில் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார் என பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் கூறியுள்ளார். MP தேர்தலில் அண்ணாமலைக்கு சீட் கொடுக்கப்பட்டதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

error: Content is protected !!