News November 13, 2025
வங்கி கணக்கில் இந்த மாதம் ₹4,000.. வந்தாச்சு அப்டேட்

PM KISAN திட்டத்தின் 21-வது தவணைத் தொகை(₹2,000) எப்போது கிடைக்கும் என விவசாயிகள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இம்மாத இறுதியில் தொகையை வங்கி கணக்கில் டெபாசிட் செய்ய திட்டமிட்டுள்ள மத்திய அரசு, KYC பிரச்னையால் கடந்த முறை விடுபட்டவர்களுக்கு 2 தவணைகளையும் (₹4,000) சேர்த்து வழங்க முடிவு செய்துள்ளது. இதுவரை KYC அப்டேட் செய்யாதவர்கள் <
Similar News
News April 9, 2026
பெரம்பலூர்: உச்சம் தொட்ட வெயிலின் தாக்கம்!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே 100 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. அதன்படி நேற்று பகல் நேரத்தில் வெயிலின் தாகம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் குறைந்தபட்சமாக 81 டிகிரியும், அதிகபட்சமாக 102 டிகிரியும் வெயில் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே வராமல், கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
News April 9, 2026
புள்ளி, கமாவுக்காக வேட்புமனு நிராகரிப்பு: வேல்முருகன்

தவாக சார்பாக போட்டியிடும் 20 பேரின் வேட்புமனுக்கள், வேண்டுமென்றே நிராகரிக்கப்பட்டதாக வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக ECI-யிடம் அவர் புகாரளித்துள்ளார். குறிப்பாக, புள்ளி வைக்கவில்லை, கமா போடவில்லை என்று கூறும் காரணங்கள் ஏற்புடையதல்ல என தெரிவித்தார். எனவே, இதுகுறித்து தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கும் வரை 20 தொகுதிகளிலும் தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
News April 9, 2026
தூக்கத்தில்கூட ஸ்டாலின் புலம்புகிறார்: அன்புமணி

வார்த்தைக்கு வார்த்தை பாஜக எனக் கூறி ஸ்டாலின் ஏன் அக்கட்சிக்கு இவ்வளவு பயப்படுகிறார் என்று அன்புமணி கேட்டுள்ளார். ராணிப்பேட்டை பிரசாரத்தில் பேசிய அவர், தூக்கத்தில் கூட பாஜக பாஜக என புலம்பும் ஸ்டாலின், யாராவது தும்மினால் கூட அதற்கும் பாஜகவே காரணம் என்று தெரிவித்துள்ளார். மேலும், தங்கள் கூட்டணியில் பாஜக உள்ளதால், தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை EPS பெற்றுத் தருவார் என கூறியுள்ளார்.


