News January 30, 2026
வங்கி கடன் அபராதம் தள்ளுபடி.. முக்கிய அறிவிப்பு

வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில், RBI முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வழக்கமாக, கடனை முன்கூட்டியே செலுத்துவோரிடம் 3- 4% வரை அபராதத் தொகையை வங்கிகள் வசூலிக்கும். 2026 ஜன.1 முதல் இந்த நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஃப்ளோட்டிங் வட்டி விகிதத்தின்படி, கடன் பெற்றவர்களுக்கே இது பொருந்தும். ஃபிக்சட் வட்டி விகிதத்தில் கடன் வாங்கியவர்கள் இதில் பயன்பெற முடியாது. SHARE IT.
Similar News
News February 7, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால்
▶இயல்: அரசியல்
▶அதிகாரம்: மடியின்மை
▶குறள் எண்: 604
▶குறள்:
குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி லவர்க்கு.
▶பொருள்: சோம்பேறித்தனமானவர்களின் வாழ்க்கையில் குற்றங்களும் பெருகிவிடும்; குடும்பப் பெருமையும் சீரழிந்து போய்விடும்.
News February 7, 2026
SPORTS 360°: துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்

டி20 WC பயிற்சி ஆட்டத்தில், நமீபியாவை 130 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா ஏ வீழ்த்தியது *காயம் காரணமாக டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து ஆஸி., வீரர் ஜோஷ் ஹேசில்வுட் விலகல் *ஆசிய உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் உயரம் தாண்டுதலில், இந்திய வீரர் ஜோதி ஆதர்ஷ் ராம் வெண்கலம் வென்றார் * ஆசிய ஷூட்டிங் சாம்பியன்ஷிப் 10மீ ஏர் ரைஃபிள் பிரிவில் ருத்ரான்ஷ் பட்டீல் தங்கமும், அர்ஜுன் பபுடா வெள்ளியும் வென்றனர்
News February 7, 2026
CINEMA 360°: டாக்ஸிக் உரிமம் ₹120 கோடி

*ஐஸ்வர்யா அர்ஜுன் நடிக்கும் ‘சீதா பயணம்’ டிரெய்லர் இன்று ரிலீசாகிறது *சத்யராஜ் நடித்துள்ள ‘4 WINDOWS’ டீசர் வெளியாகியுள்ளது *மகேஷ் பாபுவின் ‘அத்தடு’ பிப்.28-ல் ரி-ரிலீசாகிறது *தெலுங்கு பேசும் மாநிலங்களில் ‘டாக்ஸிக்’ படத்தின் தியேட்டர் உரிமம் ₹120 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது *’சிலம்பாட்டம்’ ரீ-ரிலீஸை சிம்பு ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றுள்ளனர்.


