News January 20, 2025
வங்கி கடனை செலுத்த வந்த நபரிடம் பணம் அபேஸ்

திருத்தணி அடுத்த சந்தான கோபாலபுரம் பகுதியைச் சேர்ந்த மோகன் தாஸ், திருத்தணியில் உள்ள வங்கியில் கடன் தொகையை செலுத்த வந்தார். அப்போது அவர்கையில் வைத்து இருந்த பிளாஸ்டிக் பையில் இருந்து ரூ.92 ஆயிரம் ரூபாயை அபேஸ் செய்துள்ளனர். இதுகுறித்து, அவர் அளித்த புகாரின்பேரில், திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News March 10, 2026
திருவள்ளூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

இன்று மார்ச்.9 திருவள்ளுர் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் சு.சுரேஷ், பொதுமக்களிடம் இருந்து பல்வேறு வகையான 500 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, அதற்கு உரிய தீர்வுக்கான சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் உத்திரவிட்டார். உடன் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வெங்கட்ராமன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) வெங்கடேசன் உள்ளிட்டோர் உள்ளனர்.
News March 9, 2026
திருவள்ளூர்: ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். இதற்கு <
News March 9, 2026
திருவள்ளூர்: ரூ.34,800 சம்பளத்தில் செவிலியர் வேலை!

எய்ம்ஸ்-ல் செவிலியர் அலுவலர்களுக்கான 2,551 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு பி.எஸ்சி. (ஹானர்ஸ்) நர்சிங், பி.எஸ்சி. நர்சிங் அல்லது டிப்ளமோ நர்சிங் (டிஜிஎன்எம்) முடித்திருந்தால் போதும். இதற்கான சம்பளம் ரூ.34,800/- முதல் வழங்கப்படும். இந்தப் பணிக்கு இதற்கான கடைசி நாள்: மார்ச்.16. விண்ணப்பிக்க இங்கு <


