News November 7, 2025
வங்கி ஊழியர்கள் உள்ளூர் மொழி பேச வேண்டும்: நிர்மலா

உள்ளூர் மொழி தெரியாத ஊழியர்களால் வங்கிகளில் சில பிரச்னை ஏற்படுவதை பார்த்துள்ளோம். இந்நிலையில், வங்கி ஊழியர்கள் தாங்கள் பணிபுரியும் மாநிலத்தின் உள்ளூர் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்று FM நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார். வாடிக்கையாளரை புரிந்து கொள்ள உள்ளூர் மொழி பேசுவது அவசியம் என்று கூறியுள்ள அவர், குறைந்தபட்சம் கிளை மேனேஜராவது வட்டார மொழி பேச வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 3, 2026
JEE 2-ம் கட்ட தேர்வு.. மாணவர்கள் கவனத்திற்கு

பொறியியல் படிப்புகளுக்கான JEE 2-ம் கட்ட தேர்வு ஏப்.1 தொடங்கி ஏப்.9 வரை நடைபெறவுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் தற்போது தொடங்கியுள்ள நிலையில், விருப்பமுள்ள மாணவர்கள் பிப்.25-க்குள் jeemain.nta.nic.in தளத்தில் விண்ணப்பிக்கலாம் தேசிய தேர்வு முகமை என தெரிவித்துள்ளது. JEE மெயின் தேர்வை சுமார் 12 லட்சம் பேர் எழுதிய நிலையில், வரும் பிப்.12-ல் முடிவுகள் வெளியாகின்றன.
News February 3, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஊக்கமுடைமை ▶குறள் எண்: 600 ▶குறள்:
உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார்
மரம்மக்க ளாதலே வேறு.
▶பொருள்: மனத்தில் உறுதியான ஊக்கமில்லாதவர்கள் உருவத்தில் மனிதர்களாகக் காணப்பட்டாலும் மரங்களுக்கும் அவர்களுக்கும் வேறுபாடு இல்லை.
News February 3, 2026
CINEMA 360°: ரீ-ரிலீசாகும் ‘மின்னலே’

*காதலர் தினத்தையொட்டி மாதவனின் ‘மின்னலே’ படம் பிப்.13-ல் ரீ-ரிலீசாகிறது *ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘லக்கி தி சூப்பர்ஸ்டார்’ பிப்.20 முதல் ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளது *’துரந்தர் 2′ அப்டேட் இன்று 12:12 மணிக்கு வெளியாகிறது *ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் துல்கர் சல்மான், மிருணாள் தாகூர் இணைந்து நடித்துள்ள ‘பீகி பீகி’ ஆல்பம் யூடியூப்பில் வெளியானது


